இஷா கோப்பிகர்


பிரஷாந்த் நடித்த ஜோடி, விஜயுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகை இஷா கோப்பிகர். தமிழ் தவிர்த்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமாக அறியப்படுபவர். இஷா கோப்பிகர் தான் உடற்பயிற்சி செய்துவந்த ஜிம்மில் ரோஹித் நாரங்கை சந்தித்தார். 3 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த வந்த இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் ரியானா என்கிற ஒன்பது வயது மகள் இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்து பொங்கலன்று வெளியாக இருக்கும் அயலான் திரைப்படத்தில் இஷா கோப்பிகர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முடிவிற்கு வந்த திருமண உறவு


தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக தனது கணவர் ரோஹித் நாரங்க் உடனான திருமண உறவை முடித்துக் கொண்டிருக்கிறார் இஷா. மேலும் திருமணம் ஆகி இதுவரை இருந்து வந்த வீட்டை விட்டு வெளியேறி தனது 9 வயது மகள் ரியானாவுடன் தனியாக வசிக்கத் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக அவரை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம், தனக்கு தனியாக சில காலம் தேவைப்படுவதாகவும், இப்போதைக்கு தான் எதுவும் சொல்ல விருப்பப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித் நாரங் எந்த விதமான கேள்விகளுக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை.


சமரசம் செய்யாததால் வாழ்ப்புகளை இழந்தார்


தான் நடிக்கும் படங்கள் கதாபாட்திரங்களை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருந்து வருபவர் இஷா. இதற்காக தான் நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  “ என்னுடைய குனத்திற்காக பலர் நான் சிடிசிடுப்பானவள் என்று என்னை புரிந்துகொள்வார்கள். ஆனால் நான் அப்படிதான். நான் இங்கே என்னுடைய வேலையை செய்வதற்காக வந்திருக்கிறேன். எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றால் நான் உங்களுடன் பேசுவேன். நீங்கள் என்னிடம் தவறாக நடந்துகொண்டீர்கள் என்றால், உங்கள் வழியை பார்த்துக் கொண்டு செல்லலாம். என்னுடைய இந்த இயல்பிற்காக நான் நிறைய பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். இப்போது நான் எப்படிப்படவள் என்று எல்லாருக்கும் தெரியும் . நான் விருப்பப்படாதவரை, எனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய யாரும் என்ன வற்புறுத்த முடியாது. என்னுடைய திறமைகளின் அடிப்படைகளில், நான் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேறு எந்த அடிப்படையிலும் இல்லை “ என்று அவர் தனது முந்தைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


அயலான்


சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.