திரைப்பட நடிகர்கள் சில நேரம் மிக இயல்பாக செய்யும் விஷயங்கள் அவர்களுக்கே பாதகமாக முடிந்துவிடுகின்றன. அண்மையில் பாலிவுட் நடிகர்கள் அபிதப் பச்சன் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியவர்கள் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
பைக்கில் சென்ற அமிதாப்:
பாலிவுட் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது எளிமைக்காக அதிகமாக பாராட்டப்பட்டவர்களில் ஒருவர். ஆனால் எளிமையான ஒருவராய் இருப்பதும் சில நேரங்களில் அவ்வளவு எளிதான காரியம் இல்லை.எ ளிமையான மனிதனாக வாழ அவன் கடைபிடிக்கும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் இல்லையா? மும்பை டிராஃபிக்கில் தனது காரில் மாட்டிக்கொண்ட அமிதாப் பச்சன் எரிச்சலாகி தனது காரைவிட்டு இறங்கி அங்கு பைக்கில் வந்த ஒருவர் அபிதாப் பச்சன் தெரிவித்தது போல் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மஞ்சள் டீ ஷர்ட் அணிந்த ஒருவரை நிறுத்தி அவர் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
போதாத குறைக்கு இந்த புகைப்படங்களை தனது சமுக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்து அந்த மஞ்சள் டீ ஷர்ட் அணிந்த மனிதருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறை அவரது ரசிகர்கள் அவரது எளிமையை பாராட்டவில்லை. மாறாக பைக்கில் செல்லும்போது ஒரு ஹெல்மட் கூட அணியாமல் சென்றதற்காக அவரை விமர்சித்துள்ளார்கள். இதோடு நிற்காமல் இந்தப் பிரச்சனையை மும்பை போலீஸ் வரை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த மும்பை போலிஸ் இது குறித்து அந்த வண்டி ஓட்டியவர் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரின் மீதும் அபராதம் விதிக்கப்படும் என பதிலளித்துள்ளார்கள். லிஃப்ட் கொடுத்தது தப்பாயா? என்று அந்த மஞ்சள் டீ ஷர்ட் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
அபராதம்:
இந்த லிஸ்டில் அடுத்து இருப்பது மற்றொரு பாலிவுட் நடிகரான அனுஷ்கா ஷர்மா.இதேபோல் தனது ஊழியர் ஒருவருடன் பைக்கில் ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார் அனுஷ்கா. இவரும் அதே தப்பைதான் செய்துள்ளார். பைக்கில் சென்றது மட்டுமில்லாமல் அதை புகைப்படத்தையும் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அமிதாப் பச்சனையே விட்டுவைக்காத நெட்டிசன்ஸ் இவரை எப்படி விடுவார்கள்.மும்பை போலிஸுக்கு ஒரு ஃபோன் போடு என்பதுபோல் இந்த பிரச்சனையும் மும்பை ட்ராஃபிக் போலிஸிடம் கொண்டு சேர்த்துள்ளார்கள். அவங்களுக்கும் அதே அபராதாம் தான் என்று மும்பை போலீஸ் பதிலளித்துள்ளது.
ஹெல்மட் அணியாமல் சென்றால் சுமார் 1000 ரூபாய் அபராதம் வாங்குவது முறை. இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்த அபராதத்தை யார் செலுத்தப் போகிறார்கள். இந்த செலிப்ரிட்டீஸா இல்லை? இவர்களுக்கு லிஃப்ட் கொடுத்தவர்களா? பாலிவுட் நடிகர்களுக்கு இருக்கும் அவசரம் புரிகிறது. இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றால் ஒன்று மும்பை ட்ராஃபிக்கை ஒழுங்குபடுத்த வேண்டும் அப்படி இல்லையென்றால் நட்சத்திரங்கள் எப்போதும் ஒரு ஹெல்மட்டை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.