கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வெரும் 5 ஆயிரம் ரூபாயுடன் வந்ததாக நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.


நோரா ஃபதேஹி


கனடாவில் பிறந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு இந்தியா வந்தவர் நடிகை நோரா ஃபதேஹி. 2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Roar: Tigers of the Sundarbans என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இந்தி , தெலுங்கு மொழி படங்களில் பாடல்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பிக்பாஸ் இந்தி 9 ஆவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நோராவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பெருகின. பாகுலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய இவர், தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார். நடிப்பு தவிர்த்து இவரது நடனத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.


நோரா ஃபதேஹி சமீபத்தில் பஞ்சாபி பாடகர் குரு ரந்தவாவுடன் டான்ஸ் மேரி ராணி இசை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் பாடலும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் சமூகவலைதளங்களில் அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் விறுவிறுப்பாக இயங்குபவர். இன்ஸ்டாவில் இவருக்கு  37.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது அதை ரசிகர்கள் வைரலாக்குவதும் வழக்கமான நிகழ்வு


இந்தியில் ஜான் அப்ரகாம் உடன் இவர் நடித்த சத்யமேவ் ஜயதே பாடம் 24 மணி நேரங்களில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்தது.






5 ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு இந்தியா பயணம்


இன்று பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நோரா. ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்காக மட்டுமே அவருக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் . தனது இளமைக் காலத்தில் நோரா பணம் சம்பாதிக்க நிறைய சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். வெறும் 5 ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு தான் கனடாவில் இருந்து இந்தியா வந்து சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்து சேர்ந்தபின் தான் ஒரு மாடலிங் ஏஜன்ஸி தனக்கு வாரத்திற்கு வெறும் 3000 ரூபாய் வழங்கியதாகவும் இந்த பணத்தை வைத்து தனது அன்றாட செலவுகளை சமாளித்து தனது நாட்களை ஓட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். 


இன்று ஒரு பாடலுக்கு நோரா 50 லட்சம் சம்பளமும், ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும் பெறுகிறார் என பாலிவுட் வட்டாரம் தகவல் அளிக்கிறது.