பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி தன்னுடைய கணவர் ராஜ் கௌஷால் மறைவிற்கு பிறகு சமூக வலைதளத்தில் பதிவுகளை செய்து வருகிறார். அவ்வப்போது அவர் தன்னுடைய உணர்வுகளையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் நேற்று அவர் ஒரு பதிவை செய்திருந்தார். அந்தப் பதிவு தொடர்பாக பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அந்தப் பதிவை அவர்கள் ட்ரோல் செய்ய காரணம் என்ன?


அந்தப் பதிவில் நடிகை மந்திரா பேடி தன்னுடைய நண்பர் ஒருவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி. நீங்கள் எனக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதற்கு இந்தப் படம் தான் சாட்சி.நாம் இருவரும் எத்தனை நாட்களாக நண்பர்களாக இருக்கிறோம். நம்முடைய நட்பு எப்படி பட்டது என்பதற்கு நான் உங்கள் மீது வச்சிருக்கும் நம்பிக்கை ஒரு அடையாளம். 17 வருடங்களாக என்னுடைய ஆருயிர் தோழன்..” எனப் பதிவிட்டுள்ளார். 


 






நீச்சல் குளத்தில் ஆண் நபருடன் அவர் பகிர்ந்த திரைப்படம் தொடர்பாக பலரும் மந்திரா பேடியை ட்ரோல் செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதிவின் கமெண்ட்ஸ்களை ஆஃப் செய்துள்ளார். நடிகை மந்திரா பேடிக்கு இப்படிப்பட்ட ட்ரோல் வந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண