பரமசுந்தரி பாடலில் நடனமாடிய பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன், கரண் ஜோஹர் இயக்கிய லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்காத காரணம் குறித்து பேசியுள்ளார். பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஹிந்தி சினி உலகில் அவருக்கேன தனி இடத்தை பிடித்துள்ளார்.


சமீபத்தில், க்ரித்தி 2021-ல் வெளியான மிமி படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். பி.டெக் முடித்த இளம் நடிகை, அவரின் கனவுகளை நினைவாக்க மும்பைக்கு வந்துள்ளார். ஆனாலும்  முதல் படத்திற்கு ஒப்பந்தம்  செய்வதற்கு முன் அவரின் அம்மாவிடம் அனுமதி பெற்ற பிறகுதான் நடிக்க துவங்கினாராம்.






கரண் ஜோஹர், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்குபெற்ற  இவர், பல விஷயங்களை பேசினார். அவருக்கு கிடைத்த சில பட வாய்ப்புகளையும் அவரின் அம்மாவால் கைவிட்டுள்ளார். நெட்பிளிக்ஸ்  வெளியான கரண் ஜோஹரின் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதில் உள்ள சில முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளால் அப்படத்தை  தவிர்த்ததாகவும் கூறினார்.பிறகு அந்த கதாப்பாத்திரத்தில்  கியாரா அத்வானி நடித்தார்.






அந்நிகழ்ச்சியில் பேசிய க்ரித்தி, “எனது தாயார் அந்த  கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விரும்பவில்லை. கரண் ஜோஹரின்  லஸ்ட் ஸ்டோரியின் கதை அவருக்கு பிடிக்கவில்லை.அதனால் அப்படத்தில் நடிக்காமல் இருப்பதே நல்லது என்று கூறினார். நான் ஒரு  மிடில் க்ளாஸ் குடும்ப பெண், இது போன்ற சர்சைக்குரிய படங்கள் அவர்களுக்கு  சங்கடத்தை ஏற்படுத்தும். அதற்கென்று அனைத்தையும்  என் அம்மாவிடம் அனுமதி கேட்டு கொள்ள மாட்டேன்” என்று பேசினார்.