Surya 42 Latest News : நடித்த முதல் படம் ஃபிளாப்... ஆனால் வரவேற்பு பெற்ற நடிகை... சூர்யா 42 நாயகி கிடைச்சாச்சு
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை திஷா பதானி இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படம் மூலம் நடிகை திஷா பதானி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பான் இந்திய படத்தில் தான் நடிக்க உள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை.
வாய்ப்பு நன்றி :
சூர்யா 42 படத்தில் இதுவரையில் அவர் பாத்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக இயக்குனர் சிவா மற்றும் நடிகர் சூர்யாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார் திஷா பதானி. இத்தனை பெரிய திட்டத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார்.
முதல் டோலிவுட் அறிமுகம் :
திஷா பதானி 2015ம் ஆண்டு வருண் தேஜ் நடித்த லோஃபர் திரைப்படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இருப்பினும் திஷா பதானி நடிப்பு டோலிவுட் ரசிகர்களை கவர்ந்தது. சூர்யா 42 திஷா பதானியின் ஏரண்டவி தென்னிந்திய படமாகும்.
விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்:
சூர்யா 42 படத்தின் இரண்டம் கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஹ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தினை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
புல்லரிக்கவைத்த மோஷன் போஸ்டர் :
பிரமாண்டமான வெளியீட்டிற்கு பிறகு சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த மோஷன் போஸ்டரின் போர் காட்சிகள் மற்றும் பின்னணி இசை புல்லரிக்கவைத்தது. சூர்யா 42 திரைப்படம் 3டி படமாக 10 மொழிகளில் வெளியிடப்படும் பேன் இந்திய படமாகும் என தெரிவித்துள்ளார் பட தயாரிப்பாளர்.