இந்திய சினிமா நடிகைகள் இப்போது எல்லாம் பிட்டாகவே இருக்க விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் ஜிம் மற்றும் யோகா மையங்களில் பயிற்சி செய்யும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்கின்றனர். அந்த வரிசையில் பாலிவுட்டின் பிட்டஸ்ட் நடிகைகளில் ஒருவரான திஷா பதானி மெல்லிய கயிறு போல் இருக்கும் மேலாடையை அணிந்து ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோதான் இப்ப இணையத்தில் டாப் மோஸ்ட் ட்ரெண்ட் வீடியோ.
இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவர் பிகினி மற்றும் நீச்சலுடைகளில் தனது உணர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
2022 ம் ஆண்டு திஷா பதானி நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. கரண் ஜோஹர் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்திற்கும் 'யோதா' படத்தில் நடித்துள்ளார். 2வது திரைப்படமாக 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்', திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில், ஜான் ஆபிரகாம், அர்ஜுன் கபூர் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திஷா பதானி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான தோனி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் திஷா பதானி 80 கிலோ எடை தூக்கி பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் இணையத்தில் படு வைரலானது. இதைபார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் ப்பா... செல்லம் எவ்வளவு கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்யுறாங்க என்று கமெண்ட் செய்து வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்