ராஜமெளலி மகேஷ் பாபு கூட்டணி
ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி தனது அடுத்த பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் இந்த படம் பிரம்மாண்ட சாகச கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 1000 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரியங்கா சோப்ரா , பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். எம்.எம் கீரவானி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த மார்ச் மாத இப்படத்தின் படப்பிடிப்பு ஒரிசாவில் தொடங்கியது. பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
ராஜமெளலி படத்தில் நடிக்க மறுத்த நானா படேகர்
SSMB29 படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரிடம் ராஜமெளலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மொத்தம் 15 நாள் நடிப்பதற்கு ரூ 20 கோடி அதாவது ஒரு நாளைக்கு 1.3 கோடி சம்பளமாக வழங்குவதாக கூறியும் இந்த படத்தில் நானா படேகர் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நானா படேகருக்கு கதை பிடித்திருந்ததாகவும் ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திம் ரொம்ப சின்னதாக இருப்பதாக அவர் கருதியிருக்கிறார். பணத்தைவிட அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதே தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக நானா படேகர் தெரிவித்துள்ளார். நானா படேகரின் பதில் ரசிகர்களிடம் பரவலாக கவனமீர்த்துள்ளது