Govinda divorce : இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு விவாகரத்து...மராத்தி நடிகையுடன் தொடர்பா ?

பிரபல இந்தி நடிகர் கோவிந்தாவும் தனது அவரது மனைவி சுனிதாவும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

கோவிந்தா விவாகரத்து

90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. இவருக்கு சுனிதா என்பவருடன் 1987 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு யஷ்வர்தன் மற்றும் டினா என இரு குழந்தைகள் உள்ளார்கள். 37 வருட திருமண வாழ்க்கைக்கு பின் கோவிந்தா மற்றும் சுனீதா இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருவரும் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது விவாகரத்து பெற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்த் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 

Continues below advertisement

30 வயதான பிரபல மராத்தி நடிகையுடனான தொடர்புதான் இந்த விவாகரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 

கோவிந்தா சுனிதா ஃபிளாஷ்பேக் 

கோவிந்தா மற்றும் சுனிதா இருவரும். யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்துகொண்டபோது கோவிந்தாவுக்கு 24 வயது சுனிதாவுக்கு 18 வயது. திருமணம் செய்துகொண்ட தகவல் வெளியே தெரிந்தால் கோவிந்தாவின் திரை வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்ததால் திருமணமான ஒரு வருடத்திற்கு இருவரும் ரகசிய உறவில் இருந்து வந்தார்கள். பின் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது . திருமணமான ஒரே வருடத்தில் சுனிதா தனது 19 வயதில் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பல்வேறு கேள்விகள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்த இந்த தம்பதியினர் 37 ஆண்டுகள் வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து தனித்து வாழ்வது கூட சமீபத்தில் தான் தெரியவந்தது. சமீபத்தில் நடிகர் கோவிந்தாவுக்கு குண்டடிபட்டபோது தான் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை என்கிற உணமையை சுனிதா தெரிவித்தார். கோவிந்தா தனது பங்களாவில் வாழ்வதாகவும் அவரது மனைவி குழந்தைகளுடன் எதிரில் ஒரு அப்பாட்மெண்டில் வாழ்வதாகவும் சுனிதா தெரிவித்தார். 

 

Continues below advertisement