தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றன. இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 


பாலியல் சீண்டல்;


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலைகிராமமான, மலைரெட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 21.02.2025 அன்று நடைப்பெற்ற கணினி தேர்வின் போது, 7 ஆம் வகுப்பு பயிலும் 6 மாணவிகளிடம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். 


இதையும் படிங்க: Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..


தைரியமாக புகரளித்த மாணவி:


இந்நிலையில் இதுகுறித்து மாணவிகள் 1098 என்ற குழந்தைகள் உதவிமையத்திற்கு தொலைபேசி மூலம் இந்த சம்பவம் தொடர்பாக  புகார் அளித்துள்ளனர், அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மத்தேயு என்பவர் பள்ளி மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டுனர்.


மாணவிகள் அளித்த புகாரின் பேரில், மலைரெட்டியூர் ஆங்கில ஆசிரியர் பிரபு மீது திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மத்தேயு  வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆங்கில ஆசிரியர் பிரபுவை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிங்க: Kerala crime : போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!


மேலும் பள்ளி மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது, வாணியம்பாடியில் உள்ள மலைகிராமத்திலும் பாலியல் ரீதியான குற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.