தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடைசியாக தர்பார் நடித்திருந்தார். இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பெரும்பாலான படப்பிடிகள் தற்போது நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்திற்கும் ரஜினிகாந்தும் டப்பிங் பேசிவிட்டதாக கூறப்படுகிறது.


 






இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாத்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் வேலாயுதம் படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். நடிகர் விஜய் நடித்த தலைவா படத்திலும் இவர் நடித்திருந்தார். பின்னர், தமிழில் மெகாஹிட் அடைந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தற்போது, இவர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




சிவா இயக்கத்தில் இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏற்கனவே நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ்  ஆகியோர் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரஜினிகாந்த் அல்லாத பிற கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.


chiyaan | ஒரே படப்பிடிப்பு தளம் , இரண்டு பட ஷூட்டிங் - கெத்து காட்டும் சியான் விக்ரம்!