வெங்கட் பிரபு இயக்கும் விஜய் 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் தேதி வெளியாகி உள்ள நிலையில், விஜய்யுடன் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைய இருப்பதாகவும் தெரிவிய வந்துள்ளது.


தளபதி 68


லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68 ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ. ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசைமைக்கிறார். கத்தி படத்திற்கு இரட்டை வேடங்களில் விஜய் இந்தப் படத்தில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இந்தப் படத்திற்காக அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய்  நடிக்க இருக்கிறார். இதற்காக டீ ஏஜிங் தொழில் நுட்பம் மூலம் விஜய்யின் வயதை குறைத்துக் காட்டும் முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.


கலிபோர்னியாவில் உள்ள USC ICT எனும் ஒரு கல்லூரியில் தான் 3டி முறையில் டீ-ஏஜிங் எனப்படும், இந்த வயதை குறைக்கும் தொழில்நுட்ப பணிகள் தளபதி 68 பணிக்காக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் இந்தக் கல்லூரி, அவதார் , ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் ஆகிய படங்களில் பணியாற்றி ஆஸ்கர் விருதுகள் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிறுவனம் தளபதி 68 மூலம் முதன்முறையாக இந்திய சினிமாவிற்குள் நுழைகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.


விஜய் ஜோடி


இந்தப் படத்தில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் மற்றொரு கதாநாயகியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாகவும் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பாலிவுட் நடிகர் அமீர்கானை படக்குழு அனுகியுள்ளதாக இணைய வட்டாரங்களில் பேச்செடுபடுள்ளது.


படப்பிடிப்பு எப்போது ?


வருகின்ற அக்டோபர்  மாதம் 1 ஆம் தேதி இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற உள்ளதாக அக்டோபர் 2 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையிலும், பாடல் காட்சிகள் மட்டும் வெளி நாடுகளில் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.


லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்த்ப் படத்தை தயாரித்துள்ளது.




மேலும் படிக்க : G20 Summit Bharat: ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு பதில் பாரத்... திட்டமிட்டு புறக்கணிப்பா..? மீண்டும் வெடித்த சர்ச்சை..!


Jawan Box Office Collection: 2 நாட்களில் ரூ.200 கோடி .. வரலாறு படைக்கும் ஜவான் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!