சுதா கொங்காரா இயக்கும் சூரியா 43 படத்தில் கதநாயகியாக நடிகை நஸ்ரியா நஸிம் நடிக்க இருப்பதாக தகவலகள் வெளியாகி இருக்கின்றன.


சூரியா 43


ஐந்து விருதுகளை வென்ற சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா மற்றும் சூரியா இரண்டாவது முறையாக இணை இருக்கிறார்கள். சூரியாவின் 43 ஆவது படமாக இது இருக்கும். ஜி.வி பிரகாஷ் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ஜி.வி பிரகாஷின் 100 ஆவது படமாக இருக்கும். தற்போது கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் வேலைளை முடித்தப்பின் பட்ப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


 நஸ்ரியா 


பம்பாயை மையப்படுத்திய மிகப்பெரிய கேங்ஸ்டர் படமாக இந்தப் படத்தை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மலையாள நடிகரான துல்கர் சல்மான் இந்தப் படத்தில் சூரியாவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிகை நஸ்ரியா நஸிம் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. நேரம், நையாண்டி, ராஜா ரானி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நஸ்ரியா நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வருகை தருகிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுதான் எனக் கூறப்படுகிறது.


சூர்யாவின் 42ஆவது படமான கங்குவாவுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில், திஷா பதானி, மிருணாள் தாகூர் ஆகியோர் சூர்யாவுக்கு நாயகிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.


ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், 10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமான இப்படம் உருவாகி வருகிறது. சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்-அப்களில் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.


ரோலக்ஸ்


மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விகரம் படத்தில் சூரியா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக இருக்கும் படத்திலும், நடிக்க இருக்கிறார் சூரியா. வெற்றிமாறன் இயக்கும் வாசிவாசல் படத்தின் படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் கோலிவுட்டில் பயங்கர பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சூரியா.




மேலும் படிக்க : Jawan Twitter Review: பாலிவுட்டை பதம் பார்ப்பார்களா தமிழ் படைப்பாளர்கள்! வெளியானது அட்லீயின் 'ஜவான்’ - ட்விட்டர் விமர்சனம் இதோ!


Modi Asean: உலக வளர்ச்சியில் ஆசியான் அமைப்புக்கு முக்கிய பங்கு: இந்தோனேசியாவில் பிரதமர் மோடி