Ashok Selvan Marriage: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை ஒட்டி, இருவரும் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ‘ரயிலின் ஒலிகள்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 


அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற போர் தொழில் படத்தில் நடித்த அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார். விஜய் சேதிபதி நடிப்பில் வெளிவந்த சூதுகவ்வும், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், தெகிடி படங்களில் நடித்துள்ள அசோக் செல்வன், போர் தொழில் படத்தில் மூலம் கோலிவுட்டை திரும்பிப் பார்க்கவைத்து பிரபலமானார். 


போர் தொழில் படத்துக்கு பிறகு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து வரும் அசோக் செல்வன், அதே படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டனர். ஓராண்டு காதலுக்கு பிறகு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம், பாளையக்கோட்டை அருகே திருமணம் நடந்ததால், திரை நட்சத்திரங்கள் பங்கேற்பதற்காக சென்னையில் வரவேற்பு நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.






இதற்கிடையே காதல் தம்பதிக்கு திரைத்துறை நட்சத்திரங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் பாடலை வெளியிட்டுள்ள படக்குழு, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளது. ரயிலின் ஒலிகள் என்ற வரிகளைக் கொண்ட பாடலை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் மற்றும் லெமல் லீஃப் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 


கிரிக்கெட்டை கதையாகக் கொண்ட ப்ளூ ஸ்டார் படத்தில் இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டன்களாக அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கு இடையே இருக்கும் மோதல், அவர்களின் காதல் மற்றும் வாழ்வியலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டது. 



மேலும் படிக்க: Keerthy Pandian Ashok Selvan : அசோக் செல்வனுக்கு க்யூட் ப்ரோபோஸ் செய்த கீர்த்தி பாண்டியன்!


நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்.. இணையத்தில் தெறிக்கும் திருமண புகைப்படங்கள்!