தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவருக்கு ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்தது. 


அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தலைவர்.


 


 


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இது அவருடைய படமாகவே பார்க்கப்பட்டது. அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வழக்கமான ரஜினி ரிலீஸ் படங்களுக்கு இருப்பது போலவே உச்சத்தில் இருந்தது. 


அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'லால் சலாம்' ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரிலீசுக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர். இன்று திரையரங்கில் வெளியான படத்தை பார்த்த மக்கள் நேர்மறையான விமர்சனங்களை கொடுத்து வந்தனர். 'லால் சலாம்' திரைப்படத்தில் ரஜினி தோன்றுகிறார் என்பதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது எனலாம். அந்த கேரக்டர் மிகவும் சென்சிடிவான கேரக்டர் என்பதாலும் அது தனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் அதில் நடித்ததாக அவரே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



இந்நிலையில் வெளியான அனைத்து படங்களையும் அதிரடியாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், லால் சலாம் படத்தை பற்றியும் சோசியல் மீடியா பக்கத்தில் விமர்சிக்கும் படி போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரபல பத்திரிகை ஒன்று 'லால் சலாம்' படத்திற்கு பெரிய அளவில் டிக்கெட் விற்பனை நடைபெறவில்லை அதனால் பல இருக்கைகள் காலியாக இருந்தன என்பதை சுட்டிக்காட்டும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. 


அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்து "காளியோட ஆட்டம் - காலியான கூட்டம்" என்ற கேப்ஷனுடன் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து கலாய்த்துள்ளார். லால் சலாம்  திரைப்படம் வெளியான முதல் நாள் ரஜினியின் படங்களுக்கு வழக்கம் போல திரையரங்கில் இல்லை என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தொடர்ச்சியாக வரும் விமர்சனங்கள் மூலம் லால் சலாம் படம் அடுத்தடுத்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 




மேலும் படிக்க: Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!