நடிகர் அஜித்துக்கு எதிராக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அவர் வெளியிட்டுள்ள பதிவில், “'எனக்கு பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது. அதான் ஆடியோ லாஞ்ச், அவார்ட் ஃபங்ஷனுக்கு எல்லாம் போறது இல்ல. ஆனா வருசத்துக்கு 365 ஃபோட்டோ மட்டும் சோஷியல் மீடியால வரனும். குறிப்பா விஜய் படத்தோட ட்ரைலர் வர்றப்ப, ஆடியோ லாஞ்ச், ரிலீஸ் தேதி, பர்த் டே டைம்ல.‌. என் ஃபோட்டோ வந்தாகனும். இன்னைக்கி என்ன போட்ருக்க?' 'போன ட்வீட்டை பாருங்க தல” என பதிவிட்டுள்ளார்.ப்ளூ சட்டை மாறன் அதற்கு முந்தைய ட்வீட்டில், அஜித் கார் ரேஸ் செல்வதற்கு முன்னர் எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.


என்ன காரணம்?


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்துக்குப் பின் விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் விடா முயற்சி படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






அதேசமயம் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் பைக்கில் உலக சுற்றுலா, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது என அஜித் தன்னை பிஸியாகவே வைத்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அஜித் மீண்டும் கார் ரேஸில் களம் கண்டுள்ளார். பந்தய களத்தில் அவர் கார் ஓட்டும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில் மற்ற இணையவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்துள்ளனர். 


நீண்ட நாள் சந்தேகம் 


அதற்கு காரணம் மற்ற நடிகர்களை போல அல்லாமல் அஜித் படத்தின் அப்டேட்டுகள் திடீரென வரும். மேலும் விஜய் பற்றிய தகவல்கள் எப்போது எல்லாம் ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அப்போது அஜித்தின் புகைப்படம், வீடியோ என ஏதோ ஒன்று சம்பந்தம் இல்லாமல் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இது பலருக்கும் சந்தேகத்துக்குள்ள ஒன்றாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.