யூடியூப்பில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் இயக்கி, இசையமைத்திருக்கும் திரைப்படம் ஆன்டி இந்தியன். ஆடுகளம்  ‘நரேன்’, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக திரைப்பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டு படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், படம் பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட கருத்துக்களை பார்க்கலாம்.