இளம்பெண் ஒருவர் ஆற்றங்கரையோரம் செல்பி எடுக்கும் போது, தை தக்கா.. என்று டான்ஸ் ஆடிக்கொண்டே சேற்றில் விழுந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மக்கள் அதை சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அத்துடன் அவை உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களை சிரிக்க வைக்கும். இளம்பெண் ஒருவர், ஒரு செல்ஃபிக்கு ஆசைபட்டு, அது கடைசியில் தவறாக முடிந்து அப்பெண் ஏமாற்றத்துடன் இருப்பதைபோல வீடியோவில் இருக்கிறது.
அந்த வீடியோவில், ஒரு பெண் நீல நிற கவுன் மற்றும் கருப்பு ஹீல்ஸ் அணிந்து, ஆற்றின் கரையில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் காணலாம். அந்தப் பெண் ஒரு செல்பியை கிளிக் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்ததால், தன் சமநிலையை இழந்து சேற்று நீரில் விழுகிறார். பின்னர், ச்சீ என்ற மோடில் தண்ணீரை அடித்தவாறு எந்திரிக்கிறார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'hephul5' என்ற பயனரால் பகிரப்பட்டது. இதுவரை 9000 க்கும் மேற்பட்ட லைக்குகளும், நூற்றுக்கணக்கான கமெண்ட்களும் பதிவிடப்பட்டன. பயனர்களில் ஒருவர் வீடியோவில் கருத்து தெரிவித்து, "மிகவும் அழகு" என்று எழுதினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோவை பார்க்க:
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்