சமூக வலைதளங்களின் எதைபற்றியாவது கருத்து தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதே  சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் பொழுதுபோக்காகி விட்டது. அண்மையில்மாவீரன் படத்தை கலாய்த்து மீம் ஒன்றை பகிர்ந்த நிலையில்,  தயாரிப்பு தரப்புக்கும், அவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தற்போது அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் படத்தை தொடர்புபடுத்தி வீடியோ மீம் ஒன்றைப் பகிர்ந்து அட்லீ ரசிகர்களிடம் கட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். 


ஜவான்


ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி , தீபிகா படூகோன் ஆகியோர் நடித்து அட்லீ இயக்கீயிருக்கும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக படத்தில்  டீசர் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் அட்லீ படத்தின் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரெடியா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


 


ஆண்டி  இண்டியன் இயக்குநர்


வழக்கம்போல ப்ளூ சட்டை மாறனின் கண்களில் இந்த போஸ்டர் சிக்கிய நிலையில், உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை இணைத்து அந்த போஸ்டரை பகிர்ந்தார். அதில் பழைய படம் ஒன்றில் கவுண்டமணி சினிமா வாய்ப்பு கேட்டு போன இடத்தில் பேசும் வசனமான “ கத நல்லா இருக்குமா” என்ற காட்சிகள் அடங்கிய மீம் வீடியோவை பகிர்ந்துள்ளார் மாறன். இப்படி ஒவ்வொரு படத்திற்கு ஏதோ ஒரு வகையில் படக்குழுவினரை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் ப்ளூ சட்டை மாறனை தற்போது அட்லீ ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 






மாவீரன் சர்ச்சை


முன்னதாக கடந்த ஜூலை 14-ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் மிஷன் இம்பாசிபள் படத்துடன் மாவீரன் படத்தை ஒப்பிட்டு  ”குறுக்க இந்த கெளசிக் வந்தா” என்கிற டெம்ப்ளேட்டை பகிர்ந்திருந்தார். இதற்கு மாவீரன் படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா கொடுத்த பதில் ப்ளூ சட்டை மாறனை ஜெர்க் விட வைத்தது. அடுத்ததாக அட்லீயை சீண்டியுள்ளதால் அவரிடம் இருந்து நல்ல பதிலடி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். எத்தனை முறை வாங்கினாலும் அவர் மாறாமல் தொடர்ந்து செய்ததையே திரும்ப திரும்ப செய்கிறார் என இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. 


மாமன்னன் சர்ச்சை


முன்னதாக மாமன்னன் படத்தின் போது தேவர் மகன் படத்தை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது தொடர்பான சர்ச்சைக்கூரிய கருத்துக்களை ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.