மொழி வித்தியாசம் இல்லாமல் அனைத்து நிலத்தில் இருந்து வரும் கலைஞர்களுக்கும் சமமாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று பவன் கல்யான் கூறியதை வைத்து ப்ளு சட்டை மாறன் சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாக அவர்மீது கடுமையான விமர்சங்கள் வைக்கப்பட்டு வருகின்றன
ப்ரோ
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வினோதய சித்தம்'. இந்த திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ப்ரோ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை 28 வெளியாகவுள்ளது.
பவன் கல்யாண் கோரிக்கை
இந்நிலையில் படத்தின் முன் வெளியீட்டு நிகழில் இன்று படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் சமுத்திரகனி, பவன் கல்யான், சுஜித் வாசுதேவன், ஊர்வஷி ராவ்டலா, நீதா லல்லா முதலியவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யான் தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்களைவிட தமிழ் நடிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையைச் சுட்டிகாட்டி பேசினார்.
அனைவரும் இணைந்து இருப்பதே சிறந்தது
பகவத் கீதையின் வாசகம் ஒன்றை மேர்கோள் காட்டி தனது பேச்சைத் தொடங்கிய பவன் கல்யான் “தமிழ் சினிமா தன்னை ஒரு சிறு வரம்பிற்குள் சுருக்கிக்கொள்வதாக நினைக்கிறேன். அதே நேரத்தில் தெலுங்கு சினிமா அனைத்து மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அரவணைத்து வருகிறது.
தமிழ் சினிமாத் துறை அனைத்து சாரார்களையும் உள்ளடக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதன் வளர்ச்சி தடைபடும். தெலுங்கு சினிமா முன்னேறுவதற்கான முக்கிய காரணம் பல்வேறு நிலத்தில் இருந்து வரும் கலைஞர்களை அது ஆதரிப்பதே. இங்கு மிகப்பெரிய அடையாளங்களை சம்பாதித்திருக்கும் சமுத்திரகனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், சுஜித் வாசுதேவன் மலையாள, ஊர்வஷி ராவ்டலா வட மாநிலத்தில் இருந்து வந்தவர், மற்றும் நீதா லல்லா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர். இதுபோல் பல நிலங்களில் இருந்து கலைஞர்கள் ஒன்றிணைந்து பனியாற்றும்போது ஒரு படம் அசாதாரணமான உயரத்தைத் தொடுகிறது. அதனால் இது மாதிரியான குறுகிய சிந்தனைகளை விட்டு ஆர். ஆர்.ஆர் போன்ற படங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கத்திடம் நான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்” என பவன் கல்யான் பேசினார்.
சர்ச்சையை கிளப்பும் ப்ளூ சட்டை
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் பவன் கல்யான் தமிழ் சினிமாவை குறைத்து பேசியதாகவும் அதனை கேட்டு சமுத்திரகனி மெளனம் சாதித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நெட்டிசன்கள் பவன் கல்யான் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை என்பது ப்ளூ சட்டை வீணாக சர்ச்சையை உருவாக்க முயல்கிறார் என்று அவர்மீது விமர்சனங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே பல விஷயங்களில் சர்ச்சையை உண்டாக்கியதாக விமர்சிக்கப்பட்ட ப்ளூ சட்டை தற்போது மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்