விஜயகாந்த் மறைவு


தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்நலக் குறைவால் தனது 71 ஆவது வயதில்  காலமானார். அவரது இறப்புக்கு இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்தார்கள். தமிழ் திரையுலகைச் சேர்ந்த ரஜினிகாந்த் , கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று விஜய்காந்தின் உடலை பார்த்து தங்களது இறுதி மரியாதையை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு செல்ஃபோன் மூலம் ஆறுதல் தெரிவித்தார். விஜய்காந்த் உடன் திரையில் நடித்த நடிகர்கள் , துணை நடிகர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் , பொதுமக்கள் விஜய்காந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப் பட்டது. 


நேரில் சென்று பார்க்காத நடிகர்கள்


இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்க்காதது குறித்து கேள்விகள் எழுந்தன. இதில் நடிகர் வடிவேலுவின் பெயர் அதிகம் குறிப்பிடப்பட்டது . மேலும் நடிகர் தனுஷ் , அஜித் குமார், சூர்யா , கார்த்தி , தனுஷ் , சிம்பு உள்ளிட்டவர்கள்  வெளிநாடுகளில் இருப்பதால் விஜய்காந்தை நேரில் சென்று பார்க்க முடியாதததற்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த நடிகர்கள் வராததன் காரணம் என்னவென்று குறிப்பிட்டு அவர்களை கடுமையாக சாடியுள்ளார்.


புத்தாண்டை வெளிநாடுகளில் கொண்டாட திட்டம்






தனது எக்ஸ் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் இப்படி குறிப்பிட்டுள்ளார். “வெளிநாட்டில் ஷூட்டிங். அதனால் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என ஹூரோக்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பொய்களே அதிகமாம். புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடி முடித்த பிறகே இந்தியா வர திட்டமிட்டு இருக்கிறார்களாம். ” மேலும் மற்றொரு பதிவில் அவர் “






வெளிநாட்டில் பிஸியாக இருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு உள்ளிட்டோருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு பொறுமையாக வரவும். காரில் சென்றபடியே கேப்டனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த சூர்யாவிற்கு சிறப்பு புத்தாண்டு வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

 ப்ளூ சட்டை மாறனின் பதிவு பல்வேறு தரப்பின் ஆதரவைப் பெற்று வருகிறது.