பிளடி பெக்கர்
ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குநர் திலிப் குமார் தயாரிப்பாளராக களமிறங்கிய படம் பிளடி பெக்கர். ஃபிலமெண்ட் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் கவின் நாயகனாக நடித்தார். அறிமுக இயக்குநர் சிவபாலன் இப்படத்தை இயக்கினார். ஜென் மார்டின் இசையமைத்தார். கவின் முன்னதாக நடித்த ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் பிளடி பெக்கர் படம் மீதும் ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியானது. முழுக்க முழுக்க டார்க் ஹ்யூமர் ஜானரில் உருவான பிளடி பெக்கர் திரைப்படம் குறிப்பிட்ட சில ரசிகர் தரப்பை மட்டுமே கவர்ந்தது. மற்றொரு தரப்பு ரசிகர்கள் படத்ஹ்திற்கு நெகட்டிவான விமர்சனங்களையே வழங்கினர். ஒட்டுமொத்தமாக கவினின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றாலும் படத்திற்கு தேவையான வரவேற்பு கிடைக்காததால் படம் வசூல் ரீதியாக சரிவை சந்தித்துள்ளது. மேலும் இதே நாளில் வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் லக்கி ஆகிய பாஸ்கர் உள்ளிட்ட படங்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து அப்படத்திற்கு மக்கள் கூட்டம் அதிகரித்ததும் பிளடி பெக்கர் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
ரஜினி ஸ்டைலில் மேட்டரை டீல் செய்த ரஜினி
பிளடி பெக்கர் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 10 கோடி என கூறப்படுகிறது. இதுவரை படம் உலகளவில் 9 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமாகிய முதல் படமே தோல்வியைத் தழுவியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் இந்த மேட்டரை செம போல்டாக டீல் செய்துள்ளார் நெல்சன்.
படம் ஃப்ளாப் ஆனது தெரிந்ததும் தனது விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுக்கு நஷ்ட ஈடாக குறிப்பிட்ட தொகையை திருப்பிக் கொடுத்துள்ளார் நெல்சன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த முன்னெடுப்பை முதலில் எடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியைப் போலவே நெல்சன் இந்த மேட்டரை டீல் செய்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.