சினிமா விமர்சகர்கள் பற்றி, நடிகர் விஜய் ஆண்டனி பேசிய வீடியோவை நடிகர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 


நடிகர் விஜய் ஆண்டணி தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், சினிமா விமர்சனம் பற்றி பேசும் போது, “ ரிவியூ கொடுக்கலாம். ஆனா அத மனித நேயத்தோடு கொடுக்கணும். ஒரு மாணவன் 10 கிளாஸ் பெயில் ஆகிட்டான் வைச்சுப்போம். அத ஊருக்கே கொட்டடிச்சு சொன்னா அது எப்படி இருக்கும்.


அந்த மாணவன “ நல்லா படிச்சுருக்கலாமே.. இனி நல்லா படி அப்படி சொல்றதும் ரிவியூதான். நீயெல்லாம் ஏன் படிக்க வர்ற.. வீட்ல படுத்து தூங்கலாமே அப்படி சொல்றதும் ரிவியூதான். இப்படியெல்லாம் பேசுனா அவன் அன்னைக்கே செத்துருவான். அப்படியெல்லாம் அவன கொல்லக்கூடாது. அவன் தகுதிக்கேற்ப அவன் முயற்சி பண்றான். 




சாவுனா என்ன.. ஒருத்தனோட நம்பிக்கையை கொல்றதும் சாவுதான். உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனா கடவுள் நம்பிக்கை இருக்கவண்ட போய், கடவுள் இல்ல அப்படிணு சொல்லாத. அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில வாழ்ந்துக்கிட்டு இருக்கான்.  


ஒருத்தனோட நம்பிக்கைய சாவடிக்கறது மூலமா, அவன் மட்டும் சாவறதுல்ல அவனை சார்ந்து இருக்குறவங்களும் சாவுறாங்க.. அதனால விமர்சனம் செய்றவங்க கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனம் செய்யணும். 


நீதியில் தவறும் போது, சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் போது, காசுக்காக நீ என்ன வேணாலும் செய்வியா அப்படிணு நீங்க விமர்சிக்கலாம்” என்று பேசினார்.


 


 






இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த இயக்குநர் சேரன், “ Well said விஜய் ஆண்டனி sir..  நீங்கள் சொல்லும் வலிகள் புரிய அவர்கள் காதுகளையும் மனதையும் திறந்து வைத்திருக்க வேண்டும்..  நேர்மையற்றவர்களின் மனதை அசைத்துப்பார்க்கும் மிக நேர்த்தியான பதில் ..  அசைந்தால், வலிகள் புரிந்தால் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.