Mansoor Ali Khan Trisha Video: திரிஷா குறித்து அவதூறு கருத்து கூறிய மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

 

மன்சூர் அலிகானுக்கு கண்டனம்:


 

விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். அண்மையில் பேட்டியளித்த அவர், லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷாவுக்கு நெருக்கமாக நடிக்க தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பேசினார். மேலும், அந்த காலத்தில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் போல் தற்போது தனக்கு கிடைப்பதில்லை என்றதுடன், வில்லனாக பெண்களுக்கு எதிராக நடிப்பதை விரும்புவதை போல் பேசி இருந்தார். 

 

மன்சூர் அலிகானின் வெறுப்பு மிகுந்த பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் மன்சூர் அலிகான் பேச்சு அருவருக்கத்தக்க விதமாக இருப்பதாகவும், இதுபோன்ற கீழ்த்தரமான நபருடன் இனிமே நடிக்க மாட்டேன் என த்ரிஷா கூறி இருந்தார். த்ரிஷாவை குறிப்பிட்ட மன்சூர் அலிகான் பேசியதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 

 

காவல்துறை நடவடிக்கை:


 

அந்த வரிசையில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.  இந்த சூழலில் தன் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.