Just In





Nayanthara: பெருந்தன்மை காட்டிய ரஜினி - செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு நயன்தாரா போடுற சீன்.! புட்டு புட்டு வச்ச பிரபலம்!
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விமர்சிக்கும் விதமாக, தற்போது பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம், நயன்தாரா என நினைப்பது தான் எனது மனதிற்கு நெருக்கமாக உள்ளது என நயன்தாரா வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரலானதோடு, நிறைய விவாதங்களையும் கிளப்பியது. தற்போது இந்த அறிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று சினிமா விமர்சகரான பிஸ்மி யூடியூப் பேட்டி ஒன்றில் புட்டு, புட்டு வைத்துள்ளார்.
நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தது விக்னேஷ் சிவன் மட்டும் தான் திரையுலகில் யாருமே அவரை அப்படிக் கூப்பிட விரும்பவில்லை என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மற்றொருபக்கம் அண்ணாத்த படத்தில் சன் பிக்சர்ஸ் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையாக நயன்தாராவிற்கு டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என போட்டார்கள் என்ற சந்தேகம் வலுத்துவருகிறது.

இந்த ஒரு காரணத்தை சுட்டிக்காட்டியே நயன்தாரா ரசிகர்கள் அந்த அறிக்கைக்கு முட்டுக்கொடுத்து வந்தனர். தற்போது அதனை பிஸ்மி உடைத்துள்ளார். நயன்தாரா நடித்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் போது, அந்த இயக்குநருக்கு போன் செய்து லேடி சூப்பர் ஸ்டார் என டைட்டில் கார்டில் போட்டே ஆக வேண்டும் என விக்னேஷ் சிவன் நெருக்கடி கொடுப்பாராம். கெஞ்சினால் மிஞ்சியும், மிஞ்சினால் கெவ்ஞ்சியும் விக்கி பல இயக்குநர்களிடம் காரியம் சாதித்து வந்துள்ளார்.
அப்படித்தான் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, சிறுத்தை சிவாவை அணுகிய விக்னேஷ் சிவன் அதே கோரிக்கையை அவரிடமும் வைத்துள்ளார். விக்னேஷ் சிவனின் நெருக்கடி தாங்காமல், அவர் வந்து சன் பிக்சர்ஸிடம் போய் ஒரு ரிக்வெஸ்ட் வைக்கிறார். “சார் தப்பா நினைச்சுக்காதீங்க” இந்த மாதிரி அவங்க கேக்குறாங்க நம்ம போடலைன்னா நல்லா இருக்காதுன்னு சிறுத்தை சிவா போய் சன் பிக்சர்ஸ இடம் பண்றாரு. அவங்க உடனே என்ன சொன்னாங்க அப்படின்னா, சார் நம்ம வந்து ரஜினியை வச்சு படம் எடுத்துட்டு இருக்கோம். அவர்தான் சூப்பர் ஸ்டார் அவரை சூப்பர் ஸ்டார்னு போடும்போது இவங்களை எப்படி நம்ம லேடி சூப்பர் ஸ்டார்னு போட முடியும்?, ரஜினி சார் என்ன நினைப்பார் என சன் பிக்சர்ஸ் மறுத்துள்ளனர்.
உடனே சிறுத்தை சிவா ரஜினி கிட்ட போய் இதை சொல்லியிருக்காரு. நயன்தாரா இந்த மாதிரி ஆசைப்படுகிறார்ன்னு. ரஜினி ஒரு பெருந்தன்மையான மனிதர், அவர் அதை போடுங்களேன் என்ன தப்பு என உடனே பச்சைக்கொடி காட்டியுள்ளார். அப்படித்தான் அண்ணாத்த படத்திலும் லேடீஸ் சூப்பர் ஸ்டார்ங்கிற பேர் வந்தது. அனைத்திற்கும் மேலாக நயன்தாரா சொந்த படம் எடுத்தார்கள் இல்லையா, அந்த படங்களில் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுக்கொண்டார். உண்மையிலேயே அந்த பட்டம் பிடிக்கவில்லை என்றால், அதில் இருந்தாவது தூக்கியிருக்கலாமே என பிஸ்மி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.