ஆபாசப்படம் பார்ப்பது தன் கனவை சிதைத்ததாக அமெரிக்காவின் பிரபல பாடகி பில்லி எலிஷ் தெரிவித்துள்ளார். நேடியோ ஒன்றில் பேசிய பாடகி பில்லி எலிஷ், ஆபாசப்படம் பார்ப்பது ஒரு அவமானம் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் நிறைய ஆபாசப்படங்களை பார்த்தேன். எனக்கு 11 வயதாக இருக்கும் போதே ஆபாசப்படம் பார்க்க தொடங்கினேன்.
நான் அதற்கு அடிமையாகினேன். அது என்னுடைய மூளையை மழுங்கச் செய்தது. என்னுடைய கனவுகளை சிதைத்தது. அதிகப்படியான ஆபாச எண்ணம் என்னை பேரழிவுக்கே கொண்டு சென்றது. மேலும் பேசிய அவர், ஆபாசப்படத்தின் பிரச்னையே '' இயற்கையான உடலுறவின் போதும் ஆபாசப்படம் நம் முன்னே வந்துபோகும். இயல்பான ஒன்று எதுவென்ற குழப்பம் நம் இயல்பை பாதிக்கும் என்றார்.
இளம் வயதிலேயே ஆபாசத்தைப் பார்ப்பது தீங்கு விளைவிக்கும் என்பதையே நிபுணர்களும் கூறுகிறார்கள். இது குறித்து தெரிவித்துள்ள யுனிசெஃப் , இளம் வயது ஆபாசப்படம் என்பது "மோசமான மன ஆரோக்கியம், பாலியல் மற்றும் புறநிலை, பாலியல் வன்முறை மற்றும் பிற எதிர்மறையான விளைவுகளுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்