பைக் ரைடரும், யூடியூபருமான டிடிஎப் வாசன் நடிக்கவுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் பைக் ஓட்டும் ஸ்டைலை பார்த்து இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் ரசிகர்களாக இருக்கும் 2கே கிட்ஸ்கள் பலர் இவரை சந்திக்க ஆர்வம் காட்டுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசான் வைத்த மீட் அப்-க்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான பைக் ரைடர்ஸ் மற்றும் அவரின் தீவிர ரசிகர்கள் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குவதாக இவர் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம். இவர் கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகி இருக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாள் இதற்கு முன்பு அவருடைய பிறந்தநாளில் ஃபேன்ஸ் மீட் வைத்து தன்னுடைய ரசிகர்களை அடிக்கடி சந்திக்கும் இவர் தற்போதைய பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க முடியாது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தற்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பூஜை ஆரம்பித்து இருப்பதால் தான் இந்த வருடம் மீட் அப் வைக்க முடியவில்லை என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.