2022 ஆம் ஆண்டு மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்த திரைப்படங்களின் லிஸ்ட் இங்கே!

  
                               


 


1.'டிமாண்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,நடிகர் விக்ரம் நடிப்பில் ,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.



                                   


2.இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில்,ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ,கேப்டன். இது எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில்  தோல்வியை சந்தித்தது.


 



                             


3.தெலுங்கு திரையுலகில் வெற்றியை நாட்டிவிட்டு, தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்கினார் அனுதீப். இத்திரைப்படம் பாக்ஸ ஆபீஸில் தோல்வியை சந்ததித்தது.


                           
                                                                 


4. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்,நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸடார் ஓ.ஓ.டி தளத்தில் வெளியானது 'மாறன்' திரைப்படம். இது எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது.



                                                                 


5.இயக்குனர் து.பா சரவணன் இயக்கத்தில்,நடிகர் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை.


 



                                                 


6. தெலுங்கு தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் 'ராதே ஷாம்'. நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமான முறையில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.


 



                                                     


7.இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ,நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சினம்'. இத்திரைப்படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறாமல் தோல்வி அடைந்தது.


 
                                               


8. இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ,நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ஹிந்தியில் உருவாகி பெரும் எதிர்பார்பில் வெளியான திரைப்படம் 'லைகர் ’. இத்திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை சந்தித்தது.



                                         

 


9.'எட்டுத் தோட்டாக்கள் ' திரைப்படத்தின் வெற்றியால் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மீது பெரும் நம்பிக்கையை உருவாக்கியது  ‘குருதி ஆட்டம்’. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. 


 


                                             


10. இயக்குனர் ஜேடி-ஜெரி இயக்கத்தில் ,'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் தயாரித்து நடித்த திரைப்படம் 'தி லெஜெண்ட்'.இது விமர்சனத்திலும்,வசூலிலும் படுதோல்வியை சந்தித்தது.