பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 14 பேர் போட்டியாளர்களுடன் கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளே பங்கு பெற்று வருகின்றனர். இதனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விரைவில் நிறைவு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக பல்வேறு கடினமான டாஸ்க்குகளை பிக்பாஸ் வழங்கி வருகிறது. இதன்படி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.




இதன்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் மறைமுக அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் பாலா மற்றும் ரம்யா பாண்டியன் இடையே நடைபெற்ற வாக்குவாதம் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமுக அறைக்கு சென்ற ரம்யா பாண்டியன் முதலில் பாலா பற்றி கருத்து தெரிவிக்கிறார்.


இதையடுத்து, அந்த அறைக்கு சென்று பேசும் பாலா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் வெற்றி பெற வேண்டும் என்று ரம்யா பாண்டியன் நினைக்கிறார் என்று கூறுகிறார். இதனால், கோபமடைந்த ரம்யா பாண்டியன் பாலாவிடம் எந்த இடத்தில் நிரூப் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் என்று கேட்கிறார்.




அதற்கு விளக்கமளிக்கும் பாலா, நிரூப் ஜெயிக்க வேண்டும் என்று கத்தினீர்கள் என்று ரம்யா பாண்டியனுக்கு விளக்கமளிக்கிறார். அதற்கு கோபமடைந்த ரம்யா பாண்டியன் பாலாவிடம் இந்த கேம் புரிகிறதா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீர்களா? என்று கோபத்தில் பாலாவிடம் கேள்வி எழுப்புகிறார். இவர்கள் இருவர் இடையே நடைபெறும் வாக்குவாதத்தை பிக்பாஸ் அல்டிமேட் புதிய ப்ரோமாவாக வெளியிட்டுள்ளது.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதற்கு பிறகு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர் சிம்பு தொகுத்து வழங்கத்தொடங்கிய பிறகு பிக்பாஸ் அல்டிமேட் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் வெளியேற்றத்திற்கு பிறகு நடிகை வனிதா வெளியேறிவிட்டார். சுரேஷ் சக்கரவர்த்தியும் உடல்நலக்குறைவால் வெளியேறிவிட்டார்.




பிக்பாஸ் அல்டிமேட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் ரசிகர்கள் யார் வெற்றிபெறுவார் என்று மிகுந்த  எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால், வரும் நாட்களில் பரபரப்பான பல டாஸ்க்குகளையும் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண