தன்னை யாரோ பின் தொடர்வதாகக் கூறி பிக்பாஸ் பிரபலமான ஆர்.ஜே.வைஷ்ணவி வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்துள்ளார்.


சின்னத்திரையில் புது மாதிரியான ஷோவாக வெளிவந்து கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்ய கோடிக் கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஷோ பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று பிரபலமானவர் ஆர்ஜே வைஷ்ணவி.


பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பல சர்ச்சைகளில் பெரிதாக பேசப்பட்டார். பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பின் தனது வழக்கமான பணிகளை கவனித்து வருகிறார். இடையில், சமூகவலைதளங்ளில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.


ஃபாலோ பண்றாங்க:


அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் சென்சேஷனல் ஆனது. அதில், ஆர் ஜே வைஷ்ணவி, மர்ம ஆசாமி ஒருவர் தன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகக் கூறியிருப்பார். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் என் வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சிக்கு சென்றிருந்தேன். அப்போது, இளைஞர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்தார்.  நான் எங்கு சென்றாலும் அந்த நபர் என்னை ஃபாலோ செய்தார். இதனால் நான் பதற்றம் அடைந்தேன். 


அந்த நபர் விடாமல் பின் தொடர்ந்ததால் நான் என் வீட்டுக்குச் சென்றால் என் வீட்டை அவர் அடையாளம் கண்டுவிடுவாரோ என்று தோன்றியது. அதனால் நான் வேறு வேறு தெருக்களில் திரிந்தேன். அந்த மர்ம என்னை மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்றேன்.






ஆனால், ஒரே ஒரு வேலையை சாதுர்யமாக செய்தேன். நான் தொலைபேசியில் பேசுவது போல் அந்த மர்ம நபரை வீடியோ பதிவு செய்தேன். இது குறித்து எனது அம்மாவிடம் கூறிய போது, மர்ம ஆசாமி குறித்து போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என்றார். நீ புகார் கொடுத்தால் அந்த நபர் பழிவாங்கக்கூடும் என அம்மா சொன்னார். ஆனால், புகார் அளித்தால்தான் இதுபோன்று வேறு ஒரு பெண்ணுக்கு நடக்காது என்ற ஒரே நோக்கத்துடன் புகார் அளித்தேன். இவ்வாறு வைஷ்ணவி கூறியுள்ளார்.


வீடியோ ஆதாரத்துடன் இந்த புகாரை சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்திலும் டேக் செய்துள்ளார். 
வைஷ்ணவி தைரியமாக மர்ம நபர் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு புகார் அளித்ததற்கு காவல்துறை தரப்பில் இருந்தும் சமூக வலைதளம் மூலம் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.