யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேலாக அதிகரித்திருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 





யூடியூப் ஷார்ட்ஸ்:


ஆல்பபெட் நிறுவத்தின் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக், மெட்டா நிறுவனம் டிக்-டாக் வீடியோ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியபோது அதற்கு போட்டியாக தங்களது நிறுவனங்களிலும் ஷார்ட்ஸை அறிமுகம் செய்தது. 


இரண்டு ஆண்டுகளுக்கு முன், யூடியூப் தனது பயனர்களுக்கு ஷார்ட்ஸ், அதாவது குறைந்த நேர வீடியோக்களை அறிமுகம் செய்தது. தற்போது உலகில் உள்ள ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்ப்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 




இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் பிரிவின் தலைமை அதிகாரி. “மக்களிடையே ஷார்ட்ஸ் வகையாக வீடியோக்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப் ஷார்ட்ஸ் பார்ப்பவர்களின் என்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. மாதந்தோறும் ஷார்ட்ஸ்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது, என்றார்.


யூடியூப் நிறுவனம் கடந்த ஆண்டு, யூடியூபில் வைரல் கன்டெண்ட் உருவாக்குபவர்களுக்கு ரிவார்ட் வழங்கும் வகையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நிதி அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.


யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் விளம்பரம் செய்து வருமானம் ஈட்டும் வகையில் கன்டண்ட் கிரியேட்களை அந்நிறுவனம் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு யூடியூப் லாபம் ஈட்டியிருக்கிறது. 


யூடியூப், மெட்டா, டிக்-டாக் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஷார்ட் வடிவ வீடியோக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. 



யூடியூப் ஷார்ட்ஸ் அம்சம் டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் போன்றவைகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.


ஷார்ட் வீடியோ - ரீமிக்ஸ்


யூடியூப் தனது ஷார்ட்ஸ் இயங்குதளத்தில் ‘கட்’ என்ற புதிய அம்சத்தையும் கொண்டு வருகிறது. இதன்மூலம் உங்கள் சொந்த கிளிப்பில் பிற பயனர்களின் வீடியோக்களின் பகுதிகளைச் சேர்க்க முடியும். டிக்டோக்கில் உள்ள ‘ஸ்டிட்ச்’ அம்சத்தைப் போலவே கட் வேலை செய்யும். அதேநேரத்தில், தங்கள் கிளிப்களை மற்றவர்களின் வீடியோக்களின் ஆடியோவை கொண்டு பயன்படுத்துவதை விரும்பாத யூசர்கள், இந்த அம்சத்திலிருந்து விலகலாம். அதற்கான செட்டிங்ஸூம் கொடுக்கப்படும். இந்த அப்டேட் முதலில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வர இருக்கிறது. பின்னர், ஆண்ராய்ட் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


உலக அளவில் யூடியூப் பல கோடி அளவிலான பயனர்களை கொண்டுள்ளது. டிக்டாக் தடைக்கு பின்பு, யூடியூப் ஷார்ட்ஸ் மிகவும் பிரபலமானது. தற்போது, அனைத்து வகையா எலக்ட்ரானிக் டிவைஸ்களிலும் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்தப்பட்டால், பார்வையாளர்களின் கண்டன்ட் அதாவது தகவல் நுகர்வில் பெரும் மாற்றம் நிகழ இருக்கிறது. ஷார்ட் வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை விரைவில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண