பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடுக்கான இன்றைய தினத்தின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. வழக்கம்போலவே டிப் டாப்பாக உடை அணிந்து வந்துள்ளார் கமல்ஹாசன். இது விதியா, விதிவிலக்கா, விதியில இருக்கா?, விதிமீறலா, என் தலைவிதியா அப்படின்னு கூட விவாதிச்சிருக்காங்க. இன்னும் சில பேர் சனிக்கிழமை வரட்டும் நான் அவரிடமே பேசிக்கறேன் அப்படின்னு சொல்லியிருக்காங்க. நமக்கும் பேச வேண்டியது இருக்கு.. ராத்திரி பேசுவோம்” என்கிறார் கமல்.



கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் போட்டியாளர்களிடையே அழுகையும், சண்டையுமாக சென்றது. சுருதி தாமரைச் செல்வியின் காயினை எடுத்ததிலிருந்து ஆரம்பித்தது எல்லாமும். சண்டையில் பாவனியும் போய் மாட்டிக் கொண்டார். இசை வாணியின் லீடர்ஷிப்புக்கு சில எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கே இருந்தன. கேட்கலன்னா, நான் கமல் சார்ட்டயே பேசிக்கிறேன் என சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இதுகுறித்தெல்லாம் கமல் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 






29-ஆம் தேதி எபிசோடில், கிராமத்தாரா நகரத்தாரா பட்டிமன்றம் நடந்தது. அதில் ஆளாளுக்கு பல விஷயங்களைப் பேசியது செம்ம எண்ட்டர்டெய்ன்மெண்ட். அதில் உணவு விஷயத்தில் கிராமத்தாரும், பிக்பாஸ் ஆட்டம் புரிந்து விளையாடுவதில் நகரத்தாரும் இசையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி. தாமரை பொங்கியெழுந்து மீண்டும் சாமியாடத் தொடங்கிய பின்புதான் அனைவரும் அமைதியானார்கள். தாமரையை அடக்கி வாசிக்கச் சொல்லி ராஜு கொடுத்த அட்வைஸ் ஸ்வீட்டான விஷயம். ஆனால் வீக்கெண்ட்டின் குறும்பட ஷோவுக்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது


தவிர சுருதி அணியும் உடை பற்றி தாமரைச் செல்வி பேசியதும் ஆடியன்ஸ்களுக்கு கொஞ்சம் எதிர் ரியாக்‌ஷன்களைக் கொடுத்தது. உடை அவரவர் விருப்பம் சிலர் கமெண்ட் செய்தனர். சிபி, தாமரைச் செல்வியைக் கண்டித்த விதம் ஆடியன்ஸ்களிடமிருந்து ஹார்ட்க்களை அள்ளிக் கொடுத்தது.