விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தமிழ்நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆவார்கள். பிக்பாஸ் ஷோவிற்கு கிடைத்த வரவேற்பால் பிகபாஸ் அல்டிமேட் என்ற 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் விலகலுக்கு பிறகு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதனால், பிக்பாஸ் அல்டிமேட்டின் டி.ஆர்.பி. எகிறி ரசிகர்களும் அதிகளவில் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த விறுவிறுப்புக்கு மேலும் கூடுதல் விறுவிறுப்பை ஏற்றும் விதமாக தற்போது சாண்டி மாஸ்டர் மற்றும் "கலக்கபோவது யாரு" புகழ் தீனா வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்குகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ஏலம் :
முதலில் "கலக்கபோவது யாரு" புகழ் சதீஸ் முதல் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது என்று புரியவில்லை என்றும், எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியவில்லை என்றும் கூறிவருகிறார். இந்தநிலையில், தற்போது சாண்டி மற்றும் தீனா களமிறங்கியுள்ளது பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் சாண்டி மற்றும் தீனாக்கு பிக்பாஸ் ஒரு அல்டிமேட் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்களை பற்றிய குணநலன்களை சொல்ல வேண்டும். இதைகேட்டு இம்பிரஸ் ஆகி சாண்டி மற்றும் தீனா ஏலத்தின் மூலம் தங்களது பக்கம் எடுத்துக்கொள்வர். அப்படி இருக்கையில் ஒவ்வொரு போட்டியாளர்கள் தங்களை பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும்போது ரம்யா பாண்டியன் மட்டும் பன்ச் போன்று ஒரு வாக்கியத்தை பேசினார். கையில் இருக்குது நெகம்.. எனக்கு இருப்பதே அழகிய சிரித்த முகம் என்றார். இதைகேட்டு சாண்டி உடனே இந்தாடா தீனா ரம்யாவ நீயே எடுத்துக்கோ என்று சொல்ல, தீனாவும் சாண்டியிடம் எனக்கு வேணாம் என்று ஓடிவிடுவார். அந்த ஏலமே கலகலப்பாக செல்ல, அத்துடன் அந்த ப்ரோமோவும் முடிந்தது. தற்போது, இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்