பிக்பாஸ் தமிழ் 9
விஜய் தொலைக்காட்சியில் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 9 ஆவது சீசன் நாளை அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே முடிந்துவிட்டது. மேலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்னை ஈவிபி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். அந்த வகையில் கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் 9 போட்டியாளர்கள் பட்டியல்
முன்னதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , இயக்குநர் பிரவீன் காந்தி , மாடல் அரோரா , பிரபல யூடியூபர் ஜனனி அசோக் குமார் ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின . தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளினியான வி.ஜே பார்வதி மற்றும் மகாநதி சீரியல் நடிகர் கமாருதின் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளதாக அண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடம் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் இன்ஸ்டாகிராம் பிரபலம் , சமூக செய்ற்பாட்டாளரான திருநங்கை ஒருவர் மற்றும் சில சீரியல் நடிகர் , நடிகைகள் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய விதிகள்
இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில புதிய நடைமுறைகளை சேர்த்துள்ளன. அந்த வகையில் இந்த முறை வைல்டு கார்டு சுற்று இல்லை என்றும் ஒரே நேரத்தில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போட்டியாளர்கள் நீராடு வகையில் ஜக்கூஸி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜக்கூஸியை மையமாக வைத்து இந்த முறை போட்டியாளர்கள் இடையில் நிறைய சர்ச்சைகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.