தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில், ஹீரோவாகவும் - வில்லனாகவும் பிரபலமான விஜய் சேதுபதியை ஒரு தொகுப்பாளராகவும் மாற்றி உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே கமலஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை யார்? தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ.15 கோடி ரூபாய், சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.


விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட நிலையில் இந்த முறை சற்று வித்தியாசமாக முதல் நாளே சாச்சனாவை வெளியே அனுப்பிய பிக்பாஸ் பின்னர் வைல்ட் காட் மூலம் மீண்டும் உள்ளே அழைத்து வந்தார்.


இதை தொடர்ந்து, மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வாரம் ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் 50 ஆவது நாளை நெருங்கிய போது, அதிரடியாக ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களையும் உள்ளே அனுப்பி போட்டியாளர்களை மோத விட்டு விறுவிறுப்பை கூட்டினார்.


பிக்பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த விஜய் சேதுபதி, சாச்சினா மற்றும் ஆர் ஜே ஆனந்தியை அடுத்தடுத்து வெளியேற்றினார். தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இருவரும் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாச்சனா ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளமாக வாங்கி வந்த நிலையில் 12 லட்சத்திற்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளதாகவும், ஆர்.ஜே.ஆனந்தி ஒரு நாளைக்கு ரூ.25,000 வீதம் சம்பளமாக பெற்று வந்த நிலையில், 15 லட்சத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது.