சுருதியின் வாழ்க்கையைப் பற்றி அவர் பேசியது நிறைய புரிய வைத்தது. மிகச்சிறிய வயதில் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கை முழுக்க இரண்டாம் தரமாகவே நடத்தப்பட்ட கதையையும், இரண்டாம் தரமாக நடத்திய அப்பாவையும் பற்றிச் சொன்னார். எல்லோருமே கண்ணீர் கடலில் ஆழ்ந்து போனார்கள். அப்பா செத்தப்போ, சந்தோஷமா இருந்தேன் என்னும் அந்த வார்த்தை, Abusive வாழ்க்கையின் அழுத்தத்தை காட்டியது. எல்லோருமே லைக்தான் கொடுத்திருந்தார்கள். ராஜு அழவில்லை. ஆனால் லைக் கொடுத்துவிட்டார். ராஜு பாய் நீங்களுமா, உங்களுக்குத்தான் அழுதா பிடிக்காதே என சொல்லத் தோன்றியது. 


”அவருக்கு முதல் தாரத்து மூலமா ஏற்கெனவே வாரிசு இருந்ததால அவர் என்னை மகளாவே ஏத்துக்கல. எதையும் பெருசா எனக்காக பண்ணதில்ல. அவரை அப்பான்னும் கூப்பிட்டதில்ல. என் கூட படிச்சவங்க எல்லாரும் அப்பா கூட சேர்ந்து க்ளோஸா இருப்பாங்க. என்னால அப்படி இருக்கமுடிஞ்சதில்ல. அம்மா ஒருவேளை அவரைக் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா, எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. எல்லாரும் நோ சொல்ல கத்துக்கோங்க” என்றார். இறுதியாக அவர் பேசியதுதான் பாய்ண்ட். ஒவ்வொரு விஷயம் செய்யும்போது யோசித்துச் செய்வதும், சில விஷயங்களுக்கு நோ சொல்லக் கற்றுக்கொள்வதும்தான்.


இமான் அண்ணாச்சி பேசும்போது சிரித்த நிரூப்பை, ஷ்ஷ்ஷ்ஷ் என கைக்காட்டினார் அபிஷேக் (சிரிச்சது குத்தமாடா) நிரூப் கொஞ்சம் சீரியதும், ‘எனக்கு பேசுறது டிஸ்டர்பா இருந்துச்சு. இனிமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்’ என தடாலடியாக பல்டி அடித்தார். நடுவில் வந்த சிபி, ரெண்டு பேர் மேலயுமே தப்பில்லடா, வேற வேற ஆங்கிள்டா என சம்மந்தமே இல்லாமல் பேசினார் (நல்லவனா இருக்கலாம் தம்பி.. இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது உனக்கு)


சுருதியை கண்ணீரில்லாமல் லைட்டாக்க அதற்குப் பின்பு நடந்ததெல்லாம் ஜாலி அரட்டைகள்தான். சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, எல்லாரையும் சாப்பிட வைக்க ப்ரியங்கா கஷ்டப்பட்டு சமைக்குது என்று அபிஷேக் சொல்ல, உனக்கு பிக்பாஸ் கொளுத்தின்னு பேர் கொடுக்கலாம்டா என்றார் ப்ரியங்கா. ஃபினாலேவுல உனக்கு பிக்பாஸ் கொளுத்தின்னு ஒரு விருது கொடுப்பாங்க என்றார் (தெருவுக்கா போறேள் டயலாக்தான் ஞாபகம் வந்தது) பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த நமிதாவை கரெக்ட் செய்றீங்களா பெருசு. போன முறை நிஷாவைக் கரெக்ட் பண்ணீங்க, இந்த முறை நமீதாவா என பெருசையே கலாய்த்தார் ப்ரியங்கா. ராஜினாமா பண்ணிட்டு போங்க பிக்பாஸ்னு சொல்றதுக்கு ராஜநாகம் என ரோல் ஆனது ப்ரியங்காவுக்கு. எம்.ஏ.. எம்.ஏ ஃப்லாசபி ஃப்லாசபி. மொத்தத்தில் ஒரு கலகல எபிசோட். நல்லா சோறு போடுறாங்க, ஏசியெல்லாம் இருக்கு. பரிமாற ஆள் இருக்கு. என்னை அனுப்பிடாதீங்க. வேணும்னா இமான் அண்ணாச்சியை அனுப்பி விடுங்கி என சொல்லிய தாமரைச்செல்விக்கு குட்டு வைத்தார் அண்ணாச்சி. எவ்வளவு நாள் கழிச்சு போனாலும் தாமரைச்செல்விக்கு இந்த அப்பாவித்தனம் போகக்கூடாது யேசப்பா