விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டர். ராபர்ட் மாஸ்டர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என கருதிய ரசிகர்களுக்கு, அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வெளியேறியது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
மிருகங்களுடன் போட்டியாளர்களை ஒப்பிட ராபர்ட் மாஸ்டர் :
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டர் தற்போது ஒரு பேட்டியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கு பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்கள் பற்றி முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் கடந்த 7 வாரங்களாக பிக் பாஸ் வீட்டினுள் தாக்கு பிடித்து வந்த ராபர்ட் மாஸ்டரிடம் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒரு வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டது.
ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் போட்டியாளர்களை நரி கூட்டம் என குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் ஒவ்வொரு மிருகங்களின் குணாதிசயங்களுடன் போட்டியாளர்களை ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார் ராபர்ட் மாஸ்டர். விஷம் உள்ள பாம்பு - தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு - ஷிவின், கழுகு - அசிம், புலி - மணி, யானை - ஜனனி, முயல் - ADK, முதலை - விக்ரம், நரி - அசீம், சிங்கம் போல யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள் இல்லை என புட்டு புட்டு வைத்தார்.
எனக்கு பிடிக்காத போட்டியாளர்கள் :
தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் பேசுகையில் பிடித்த போட்டியாளர்கள் என்றால் அமுதவாணன், ரச்சிதா, ஷிவின், குயின்சி என்றும் கொஞ்சம் பிடிக்காத போட்டியாளர்கள் என்றால் அசிம், ஜனனி, தனலக்ஷ்மி என்று சொல்லலாம். இந்த வாரம் எலிமினேட் ஆகாமல் இருந்திருந்தால், ராம் தான் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பான்.
ஞாயிற்றுக்கிழமை வந்தால் மட்டுமே நடிப்பான். மற்றபடி கேம் ஆடவே மாட்டான். மேலும் எனக்கு இதுவரையில் ஆதரவாக இருந்து வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி" என்றார் ராபர்ட் மாஸ்டர். பார்க்க மட்டுமே கரடு முரடானவர். ஆனால் உண்மையில் அவரின் குழந்தைத்தனம் தான் அனைவருக்கும் ராபர்ட் மாஸ்டரிடம் பிடித்த ஒரு குணாதிசயம். ராபர்ட் மாஸ்டரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.