இந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட  “பழங்குடியின மக்களும் ஏலியன்ஷன்ஸ்களும்”டாஸ்க்கில் கொஞ்சம் அதிகமாவே அசிம் பொங்கி வருகிறார்.


காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், தனலட்சுமி தவறுதலாக, ஷிவினின் அம்மாவை பற்றி ஏதோ கூறி அவரை அப்-செட் ஆக்கி அழவைத்துவிட்டார்.இரண்டாவது ப்ரோமோவில், ஜனனிக்கும் அஸிமிற்கும் தடாலடி சண்டை நடந்த காட்சிகள் இடம்பெற்றது. இப்படியாக, தூங்கி வழிந்து வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரிடமும் இருந்து கண்டெண்ட் வாங்கும் அளவிற்கு, பழங்குடியின மக்களும் ஏலியன்ஷன்ஸ்களும் டாஸ்க் அமைந்துள்ளது.






தற்போது வந்த மூன்றாவது ப்ரோமோவில், பழங்குடியினர் அணி அனைவரும் வெளியே இருக்கின்றனர். மற்றவர்களின் சொல்லை மதிக்காத அஸிம், வீட்டின் உள்ளே சென்று விளையாடப்போறேன் என்று சொல்கிறார். அப்போது மைனா நந்தினி,  “நீ மட்டும் விளையாடினால் நாங்கள் எப்போது உள்ளே போவது.” என்று கேட்டார்.


அதனையடுத்து பேசிய விக்ரமன், “அனைவரும் சேர்ந்துதான் முடிவு எடுப்போம். இங்கு தனிப்பட்ட முடிவு எதுவும் கிடையாது. எல்லோரையும் தாண்டி அவர் உள்ளே செல்கிறார். அவர் அப்படி உள்ளே சென்றால் அது விளையாட்டே கிடையாது. அது செல்லாது.”என்று காட்டு கத்து கத்தினார்.


ஏற்கனவே, அஸிமிற்கும் விக்ரமனுக்கும் இடையே எப்போதும் தீப்பொறி அறுமுகம் போல கலவரத்தீ நிலவிக்கொண்டு இருக்கும். சற்று அனைந்து இருந்த அந்த நெருப்பு மீண்டும் பற்றி எரிய தொடங்கியுள்ளது.


எஞ்சிய போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.




இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.