இன்றைக்கு முதல் ப்ரோமோவே லேட்டாகத்தான் வந்திருக்கிறது. கடந்து வந்த பாதையெல்லாம் பாத்தாச்சு.. நீங்க மாற்றத்தை ஏற்படுத்த போறீங்க..பிக்பாஸ் வீட்டின் எலிமினேஷனைக் குறித்து சூசகமாகச் சொன்னார் கமல்





ஸ்மோக்கிங் ரூம் மாதிரி இருக்கும் அந்த அறையில் நிரூப்பும், ப்ரியங்காவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிரூப், இமாம் அண்ணாச்சியைப் பற்றி நல்லதாகச் சொல்கிறார்கள். கண்டெண்ட்டுக்காக எதையும் செய்யாத. நார்மலா இரு என ப்ரியாங்காவுக்கு அட்வைஸ் செய்கிறார் நிரூப். நேற்றைய எபிசோடில், அபிஷேக், அக்‌ஷரா, பாவனி தலைமையில் ஒரு குழு பிக்பாஸ் அறிவுறுத்தி அமைக்கப்பட்டது. அவர்கள் சேர்ந்து கணக்கெடுப்பு நடத்தி யார் ஜொலித்தார்கள் என்பதையும், யார் கூட்டத்தில் காணாமல் போனார்கள் என்பதையும் எல்லோரிடமும் கலந்து பேசி முடிவுதர வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் காஸ்ட்யூம் வந்தது. வேகமாக ஓடிப்போய் ரசகுல்லாவை வாயில் அமுக்கினார் ப்ரியங்கா. Fun Fun. இசையின் கானாவும், சின்னப்பொண்ணுவின் கிராமியமும், அபிஷேக்கின் மிருதங்கமும் களைகட்டியது. நிரூப்புக்கு இருக்கும் முடி போதாதென சிவன் ஜடாமுடியையும் கொடுத்து விட்டிருந்தார்கள். இன்றைக்கு அந்த கணக்கெடுப்பின் முடிவும் தெரியும். எலிமினேஷன் லிஸ்டில் முன்னால் நிற்பவரையும் தெரிய வரும்.


Kamalhaasan On Suicidal Thoughts | எனக்கும் கூட தற்கொலை எண்ணம் வந்தது. அப்படி அசட்டுத்தனம் பண்ணியிருந்தா... பொட்டில் அடித்த கமல்..


நேற்றைய ப்ரோமோ..