பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் அரசியல் மேடையாக பயன்படுத்துகிறேன் என்ற குற்றச்சாட்டுக்கு கமல் பதிலளித்துள்ளார். 


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். 


அதன்படி நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன்,விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமனும் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 






இதில் விக்ரமன் அறிமுகம் செய்யப்பட்டப்போது நேரடி அரசியல் களத்தில் இருக்கிறவர் என்பதால் கமல் என்ன சொல்வார் என பலரும் எதிர்பார்த்தனர். நீங்க ஒரு விஷயம் செய்யணும்ன்னு நினைக்கிறப்ப அதை தனிமனிதனால செய்ய முடியாது. ஒரு விஷயம் நம்மளால முடியலன்னாலும் அதிகாரத்துல இருக்கறவங்களை செய்ய வைக்கணும். மேலும் சொல்லும் செயலும் ஒரே மாதிரி இருக்கணும். அதை வெளிப்படுத்துற ஒரு சான்ஸ்ன்னு நான் நினைக்கிறேன் என தெரிவித்தார். 


இதற்கு பதிலளித்த கமல், அரசியல் என்பது அது உங்களை தாக்குவது முன்னால் உங்கள் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும். நான் இந்த மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்துகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கலாம். இந்த அரசியல் என் அரசியல் அல்ல. நம் அரசியல். உங்கள் எண்ணம் என்பது என்னவென்று தெரியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் எண்ணம் இருக்கலாம். ஆனால் நீங்கள் தான் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். கமலின் பேச்சின் நடுவே அடிக்கடி அரசியல் கருத்தும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.