Bigg Boss Kamal Costume: பளபளத்த பிக்பாஸ் செட்.. ஜொலி ஜொலித்த கமல்... காஸ்ட்யூம் அப்டேட்ஸ் இதுதான் பாஸ்..

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அணித்து வந்த உடை அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

Continues below advertisement

கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருந்த போட்டியாளர்களில், சிபி 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்தநிலையில், பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டியில், நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே, அமீர், ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் இன்று இறுதி போட்டியில் களமிறங்குகிறார்கள். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அணித்து வந்த உடை அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது. நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் பளபளக்கும் லெதர் உடையில் கமல்ஹாசன் மின்னுகிறார். தற்போது அந்த உடை இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் இறுதிப் போட்டியாளர்கள் 5 பேருக்கும் சிறப்பு பரிசு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.முதலில் ராஜு மோகனுக்கு கமல்ஹாசன் பேனாவையும், பாவனிக்கு கைக்காரத்தையும் அன்புப் பரிசாக வழங்கினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement