நாளை கிராண்ட் ஃபினாலே:


பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால்,  இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர்.


இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவருக்குமே ஒருமித்த கருத்து உள்ளது. இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொரும் மீண்டும் வீட்டுக்குள் வந்தனர்.


பிரதீப் ஆண்டனி:


அனைத்து போட்டியாளர்களும் வந்த நிலையில், பிரதீப் (Pradeep Antony) மற்றும் ஐஸ்வர்யா வரவில்லை. இதில், குறிப்பாக ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் அண்டனி வராமல் இருந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் அடங்கிய போட்டோ ஒன்று வைத்திருந்தனர்.


அதில், அனைவருடைய போட்டோக்களும் இடம்பெற்ற நிலையில், பிரதீப் ஆண்டனியின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை. அதைப் பார்த்த நிக்சன், "இந்த போட்டோவில் பிரதீப் அண்ணா போட்டோவும் இருந்திருக்கலாம்" என்று சோகத்துடன் விசித்ராவிடம் பேசியிருக்கிறார். நிக்சனுக்கு ஆறுதல் கூறும் வகையில், "பிரதீப் ரொம்ப நல்லவன்டா. நேரில் பார்த்து பேசணும்.  ஒன்றும் சொல்ல மாட்டான்" என்று விசித்ரா கூறியிருக்கிறார். 


கடுப்பான ரசிகர்கள்:


இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, ரசிர்கள் பலரும் கடுமையாக திட்டி வருகின்றனர். "உங்களுக்கு இப்போ தான் பிரதீப் நல்லவனு தெரியுதா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இன்றைக்கு போட்டியாளர்களின் செண்டிமெண்ட் குறும்படம் ஒளிபரப்பபட்டது.






அதில், பிரதீப் ஆண்டனியில் சில காட்சிகளும் இருந்தன. ஒரு நிமிடம் பிரதீப் ஆண்டனியின் எமோஷனல் க்ளிப்ஸ் காட்டப்பட்டன. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், ”பிரதீப் இருந்தால் அவர் தான் டைட்டில் வின்னராக இருப்பார். நீங்க இதற்கு தகுதியானவர். மிஸ் யூ பிரதீப். ரியல் வின்னர் பிரதீப்" என்று ரசிர்கள் உணர்ச்சி பொங்க பதிவிட்டு வருகின்றனர்.  மேலும், ”ஆட்ட நாயகன் பிரதீப்” (#AattaNayaganPradeep) என்று ஹாஷ்டேகுகளும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. 




மேலும் படிக்க: Bigg Boss 7 Title winner: செம்ம ட்விஸ்ட்! பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர விடுங்க... ரன்னர் இவரா? நம்பவே முடியலையே!