டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை நேற்று முன் தினம் முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வருகிறது. இந்த 2022 ஆம் ஆண்டின் முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொகுத்து வழங்கி வருகிறார்.


மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கிய BiggBoss Ultimate நிகழ்ச்சியில் முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தினார். அதனைதொடர்ந்து, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப், சாரிக், சினேகன், அனிதா சம்பத் உள்பட 14 போட்டியாளர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் களமிறங்கினர். 


இதுவரை, விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 5 சீசன்களும் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, 24 மணிநேரமும் நேரடியாக OTT தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பயங்கரமாக போர் அடித்து வருவதாக ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். 






முன்னதாக, கடந்த 24 மணிநேரம் வீட்டிற்குள் நடந்த நிகழ்வுகளை 1 மணிநேரமாக தொகுத்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருவதால் எதை மக்கள் பார்ப்பது, எதை தவிர்ப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். 






நேற்று, முன்தினம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி முழுசாக இரண்டு நாட்கள் கூட முடியவில்லை. அதில், என்ன ஒளிபரப்புவது என்று தெரியாமல் நேற்று காலை மட்டும் சினேகன் எழுந்து நடந்ததை மட்டுமே 2 மணிநேரம் அப்படியே போட்டுள்ளனர். 






இதைபார்த்து காண்டான பிக்பாஸ் ரசிகர்கள் அடேய்! எடிட் பண்ணி போடுங்கடா! பிபி ஏறுது, பார்க்க முடியாம நேர பாக்கலாம்ன்னு மனசு மாறுது என்று கமெண்ட்களை குடம் குடமாக கொட்டி வருகின்றனர். அதேபோல், அனைவரும் தூங்கும் நிகழ்வை கூட துக்கமாக பார்க்க வேண்டி இருக்கு என்றும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண