Biggboss Tamil 5 Episode 30


பொதுவாக போட்டுக்கொடுக்கும் டாஸ்க், வெளியில் அனுப்புவதற்கு நாமினேட் செய்யும் டாஸ்க் என கலகம் செய்யும் பிக்பாஸ், முதன்முறையாக காப்பாற்ற நாமினேஷன் வைத்தார். தாமரை விஷயத்தால் பேர் கெட்டுப் போனதாலோ என்னவோ சுருதி தாமரையை காப்பாற்ற நினைத்தார். பாவனி சுருதியையும், இசைவாணியையும் காப்பாற்ற நினைத்தார். காப்பாற்ற குறைவானவர்கள் இருந்து நாமினேட் ஆகியிருப்பவர்கள் இசைவாணி, அபினய், நிரூப், பாவனி என அதே கேங் நாமினேட் ஆனார்கள்.


நிரூப்பின் ஆளுமை இந்த வாரம் இருப்பதால், அவர் வேலைகள் சொல்லிக்கொண்டிருந்தார். இமான் விதிகளை ப்ரேக் செய்தபோது, ப்ரியங்கா போட்டுக்கொடுத்தார். உடனே ப்ரியங்காவை வம்புக்கு இழுத்தார் இமான். அபிஷேக் வழக்கமான இமான் ட்ரிகரை ப்ரியங்கா ஆரம்பித்திருக்கிறார். அபிஷேக் வைல்டு கார்டில் ரீ எண்ட்ரி கொடுப்பாரா என ட்விட்டர் களம் அதகளமாகிக்கொண்டு இருந்தது.


இதோ நேற்றைய ப்ரோமோக்கள்...