கூட்டத்தில் ஒளிர்ந்தவர் யார், காணாமல் போனவர் யார் என கமல்ஹாசன் கேட்டபோது, சின்னப்பொண்ணும், நாடியா சங்கும் காணாமல் போனவர்கள் என்றும், இமான் ஒளிர்ந்தவர் என்றும் சொன்னார் அபிஷேக். என்னை மட்டும் எல்லாரும் கவனிச்சிருக்காங்கன்னா நான் காணாமப்போகலன்னுதானே அர்த்தம் என்கிறார் நாடியா சங். அக்‌ஷராவைக் கட்டிப்பிடித்து அழுது, கதறியழுத சின்னப்பொண்ணு, “நான் மக்கள் முன்னாடி காணாமப் போகமாட்டேன் சார்” என்றார். இப்படியே முடிகிறது ப்ரோமோ 2.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்றைய 14-வது எபிசோடில் யார் யாரெல்லாம் பாதுகாப்பற்ற ஸோனில் இருக்கிறார்கள் என்பது தெளிவானது. வருண், அபிஷேக், மதுமிதா, நாடியா, சின்னப்பொண்ணு ஆகிய ஐவரில் யாரோ ஒருவர் வெளியேறுவதுதான் இன்றைய எபிசோடில் காண்பிக்கப்படப்போகிறது. ஆனால் வழக்கம்போலவே இந்த முறையும் எலிமினேட் ஆனது யார் என்பது மக்களுக்கு முன்கூட்டியே கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. நாடியா சங்தான் வெளியேறி இருப்பதாக தகவல்கள் ஏற்கெனவே வைரலாகிறது.


நேற்றைய எபிசோடில், அபிஷேக்கிடம் எதையோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார் பாவனி. உடனே அபிஷேக் சத்தமான குரலில், “இன்னும் நான் விளையாடவே ஆரம்பிக்கல. நான் ஆரம்பிச்சா ஒருத்தனையும் விடமாட்டேன். வெளியேத்திடுவேன்” என்கிறார். அடுத்த நாள், மதுமிதாவிடம், ”அக்கறையாதான் இருக்கான், ஆனா அது என் மனச டிஸ்டர்ப் பண்ணுது. இது கேம் ப்ளானா இருக்கலாமோ” என்கிறார் பாவனி. அந்த நேரத்தில் கேமரா அபினயைக் காட்டுகிறது. (அபினய் குடும்பஸ்தன் ப்பா ஏய்). அதன்பிறகு, அபினயைக் கூப்பிட்டு நான் உன்னை அண்ணன் மாதிரிதான் நினைக்கிறேன் என பாவனி சொல்கிறார். உடனே அபினய் அதில் என்ன சந்தேகம், நீங்க தேவையில்லாம யோசிக்க தேவையில்ல என சந்தேகத்தைக் க்ளியர் செய்தார். கமல் லிவிங் ரூமைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். சின்னப்பொண்ணு, தாமரைச்செல்விக்கு இடையில் வந்த கிராமியமா, நாடகமா சண்டையைப் பற்றிப் பேசினார். சின்னப்பொண்ணு ஒன்றுமே நடக்காதது போல சமாளித்தார். போட்டியில் கடைசி வரை விளையாடுவதுதான் பக்குவத்தின் வெளிப்பாடு என சின்னப்பொண்ணும், அபினய்க்கும் குட்டு வைத்தார் கமல்.