நேற்றைக்கு ராத்திரி நடந்த விஷயங்களை பிக்பாஸ் நமக்கு காட்ட ஆரம்பிக்கிறார். லேடியோ ப்யூட்டிபுல் லேடியோ பாட்டு பாடி ஐய்க்கி உற்சாகப்படுத்த தாமரைச் செல்வி ரேம்ப் வாக் பண்ணப்போ அப்லாஸ் அள்ளுச்சு. எல்லாரும் பயங்கரமா ஜாலி மோடுக்கு வந்து பாராட்டத் தொடங்குனாங்க. நடுநடுவே நமீதாவும் ரேம்ப் வாக் பண்ணாங்க. அடுத்து மாஃபியான்னு ஒரு விளையாட்டை விளையாடியிருப்பாங்க போலருக்கு ( அது என்னன்னே தெரியல, நமக்குக் காட்டவும் இல்ல) நிரூப் செண்டர் ஆஃப் ஸ்டேஜ்ல உக்காந்து ப்ரியங்காதான் அவுட்டுன்னு அறிவிச்சாரு. இந்த முறை நிரூப் ஃப்ரீ ஹேர்ஸ்டைல்ல இருந்தார். அப்பாடி, நிரூப்புக்கு முடி அவ்வளவு அடர்த்தி. பிக்பாஸை விட்டு வந்ததும் ஹேர் சீக்ரெட்டைக் கேட்டு ஒரு வீடியோ போட்டுடணும் மக்களே. அதே மாஃபியா விளையாட்டில் நமீதா, கொஞ்சம் மக்கு மாதிரி நடந்துகொண்டதாக, நமீதாவை சீண்டிக்கொண்டே இருந்த தாமரைச்செல்வியிடம், ”நாளைக்கு உனக்கும் எனக்கும்தான் சண்டை. செம்ம சண்ட.. நாளைக்கு நீயும் நானும்தான் ப்ரோமோல வரணும்” என்கிறார் நமீதா 


(தம்பி..தம்பி.. ப்ரோமோ கட், அன்சீன் கட்டையெல்லாம் எடிட்டர் பாத்துப்பாங்க.. என்கிறது ரசிகர்களின் மைண்ட்வாய்ஸ்)



லைட்டாக நமீதா - தாமரைச்செல்வியின் சீண்டல் சண்டை எல்லைமீறப் பார்த்துச்சு. ப்ரியங்கா குறுக்குல குதிச்சு அதைக் கொஞ்சம் டைல்யூட் பண்ணிட்டு இருந்தாங்க. இருந்தாலும் சரியாகல. க்ளைமேட் மாறி, நிஜமான சண்டையாவே மாறுச்சு. ”உன் குணத்துக்கு 400 பிள்ளைகள் கூட வளர்ப்பன்னு” சொன்னதை, ”உன் பொழப்புக்கு” என நினைத்து, அசிங்க அசிங்கமா பேசுவேன் என சூடானார் நமீதா. தாமரை அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் கிச்சனில் நமீதா, நிரூப், ப்ரியங்கா பேசிக்கொண்டிருந்தபோது, “எல்லாரும் ரேம்ப் வாக் பண்ணோமே. அப்போ நீ மயக்குற மாதிரி பண்ணுவல்ல அதைச் சொல்லிக்கொடுன்னு தாமரை சொன்னா. என்னை ஏன் அப்படி சொல்லணும். அப்போவும் பொறுமையா சிரிக்கணுமா, முறைக்கணுமான்னு தெளிவா கேட்டேன். திரும்பவும் மயக்குற மாதிரி பாக்க சொல்லிக்கொடுன்னு சொன்னா” என்று சொன்னதும், ப்ரியங்கா அதிர்ச்சியில் நின்னுட்டு இருந்தாங்க. 



அடுத்த நாள், எட்டணா இருந்தா எட்டூருன்னு வைகைப்புயல் பாட்டோட நல்லாதான் விடிஞ்சுது. அப்புறம் ராஜு பாய் எழுந்து வந்து, “என்ன சண்டை போட்டு உருளுவீங்கன்னு பாத்தா, பல்ல காட்டீட்டு தூங்கிட்டீங்க” என தாமரைச்செல்வியிடம் வம்பிழுத்தார். அக்காவுக்கும் தம்பிக்கும்தான் சண்டை வரும் பாருன்னு போயிட்டாங்க தாமரை. அப்புறம், அக்‌ஷராவைப் போலவும், ராஜு பாயைப் போலவும் பாடி லேங்குவேஜ் மாறாம, இமிடேட் பண்ணி காட்டின இமான் அண்ணாச்சியை, பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் கோலிவுட் தூக்கிட்டு போயிடும்னு கன்ஃபார்ம் ஆகிடுச்சு. 


ஐய்க்கி தன் கதையைப் பேசவந்தாங்க. ரிலேஷன்ஷிப்ல வந்த பிரச்சனையால என்கிட்ட பேசாம போன அம்மா, அப்பா ஆறு வருஷமா என்கிட்ட இன்னும் பேசல. தஞ்சாவூர்ல பிறந்து நிறைய இடத்துல ரேப் பாடியிருக்கேன்னு ஆரம்பிச்சு எண்ணிய முடிதல் வேண்டும் பாடினப்போ, ஐய்க்கிக்குள்ள இவ்வளவு தமிழான்னு எல்லாரும் ஆச்சர்யப்பட்டாங்க. எங்கிருந்தாலும் வரவும் ஐய்க்கி பெற்றோர்களேன்னு நம்மளும் ஒரு ரெக்வெஸ்ட் வெச்சுக்கலாம்.


இன்னொரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில், சின்ன சண்டையில உணர்ச்சிவசப்பட்டு தன் கணவர் தற்கொலை பண்ணிக்கிட்டதையும், மாமியார் குடும்பம் தன்னை அரவணைக்கிறதையும் சொன்னாங்க பவனி. இன்னொரு அரேஞ்ஜ் மேரேஜ் ஐடியாவும் நடுவில் வந்து, அதுவும் நின்றுவிட்டதாகச் சொன்னப்போ, எல்லோரும் கலங்கிட்டாங்க. ”எவ்ளோ அடிபட்டாலும் எழுந்து வந்துருங்க” என எல்லோருக்கும் ஒரு மெசேஜ் கொடுத்தாங்க பவனி.


விடியற்காலையிலேயே எழுந்து, தூங்கிட்டு இருந்த தாமரையை எழுப்பி, டீ குடிக்கலாம் வாங்க என சண்டையை முடித்துவைத்தார் நமீதா. சோ ஸ்வீட்