Biggboss Tamil 5 | அபிஷேக்கை பார்த்ததே இல்ல.. கொளுத்திப்போட்ட ராஜூ... சிரிப்பலையில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

பிக் பாஸின் மூன்றாவது புரோமோவில் சிரிப்பலை வீசுகிறது.

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 5ன் இன்றைய தினத்தின் 3வது புரோமோ வெளியாகிருக்கிறது. வீக்கெண்ட்ஸ் எபிசோட் என்றாலே புகார், சிரிப்பு, நக்கல், அழுகை, கைத்தட்டல் ஆகியவற்றிற்கு பஞ்சம் இருக்காது. இன்றைய முதல் புரோமோவில் அபிஷேக்- ப்ரியங்கா இடையேயான கசின் பாசத்தால் அபிஷேக்குக்கு கண்ணீர் கசிந்தது.. (பயபுள்ள அன்னிக்கு தான் அம்மாவ நெனச்சு அழுதார்.. இன்னிக்கு என்னடான்னா ப்ரியங்காவ பாக்கறப்ப சொந்த அக்கா நியாபகம் வருதிங்கறார்).  “எப்போவுமே அவளை நான் ஒரு சகோதரியாதான் பாக்குறேன்” என்றார். ப்ரியங்கா அபிஷேக்கை அணைத்துக்கொள்ள, உன் கூடவே பொறக்கணும் பாட்டை போட்டு எமோஷனை மிக்ஸ் செய்தார் பிக்பாஸ். நமக்கும் கண்ணில் வியர்த்தது.

Continues below advertisement

 மூன்றாவது புரோமோவில் சிரிப்பலை வீசுகிறது.  வீட்டில சாப்டற அளவுக்கு யாரும் பாத்ரூம் யூஸ் பண்றதுல்ல சார் என கமலிடம் ராஜூ பாய் முறையிட கமல் சிரிக்கிறார். என் டீம்லயே இருந்தாலும் அபிஷேக்க நான் பாக்கறதே இல்ல, பாத் ரூம் க்ளீன் பண்ண சொன்னா, நான் போகும்போது மட்டும்தான் க்ளீன் பண்ணுவேங்கிறத ஆணவமா வேற சொல்றான் என கமலிடம் சிரித்துக்கொண்டே புகார்களை அடுக்குகிறார் ராஜு பாய். அதற்கு சிறப்பாக கொளுத்திபோட்டதாக அபிஷேக் பதில் சொல்கிறார்.

நேற்றைய வீக்கெண்ட் எபிசோடில், மதுமிதாவின் கதையையும், பவனியின் கதையையும் குறிப்பிட்டு, அவர்களின் துணிச்சலுக்கு வாழ்த்துக்களைச் சொன்ன கமல் ”என் திறமையை மதிக்காத உலகத்துல நான் ஏன் வாழணும்னு, எனக்கும்கூட தற்கொலை எண்ணம் வந்திருக்குன்னு” சொல்லிவிட்டு, அப்படி ஒரு அசட்டுத்தனத்தை நான் பண்ணியிருந்தா, எவ்வளவு பெரிய மேடைகளையும், புகழையும் இழந்திருப்பேன் என்று கமல் சொன்னது அனைவரையும் யோசிக்க வைத்தது.


இன்றைய எபிசோடில் என்னென்ன ஃபன்கள் இருக்கின்றன என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola