பிக்பாஸ் 7 தமிழ்


விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் (Biggboss 7 Tamil) கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது.


வெளியேற்றப்படுகிறாரா ஜோவிகா? - மறுக்கும் வனிதா


நிக்சனின் கேப்டன்சி வாரத்தில் பெரிய அளவில் பஞ்சாயத்துக்கள் எதுவுமின்றி சென்று கொண்டிருந்த  பிக்பாஸ் வீட்டில், கடந்த இரண்டு நாட்களாக அனல் பறக்கிறது. காரணம் விஷ்ணு - அர்ச்சனா இடையிலான வாக்குவாதம் தான். வார இறுதியில் கமல்ஹாசன் பேசுவதற்கு கண்டென்ட்டே இல்லாமல் இருந்த நிலையில், கடைசி இரண்டு நாளில் இருவரும் கன்டென்ட்டை வாரி வழங்கினர். அதாவது, ஸ்மால் பாஸ் வீடே இரண்டாகும் அளவுக்கு இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.


இதற்கிடையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, தினேஷ், அனன்யா, பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா, கூல் சுரேஷ் என எட்டு பேர் இருந்தனர்.   இவர்களின் நேற்றைய வார இறுதி எபிசோட்டில் பூர்ணிமா மற்றும் கூல் சுரேஷ் சேவ் ஆகினர். இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் விக்ரம் மற்றும் ஜோவிகா பெயர்கள் இணையத்தில் அடிப்பட்டு வருகிறது. அதாவது, குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளராக இருந்து வருகின்றனர்.  குறிப்பாக விக்ரமை விட ஜோவிகா தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால், ஜோவிகா எலிமினேட் செய்யப்படுவார் என்று  இணையத்தில் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், இதற்கு  வனிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.


சீக்ரெட் ரூமில் ஜோவிகா?


அதாவது, ”ஜோவிகா (Jovika Vijayakumar) வெளியே வந்திருந்தால் எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பார்கள். நான் இப்போது கோவாவில் இருக்கிறேன். எனக்கு இதுவரைக்கு எந்த ஒரு போன் காலும் வரவில்லை. ஒரு வேலை எனக்கு ஜோவிகா கால் செய்து இருந்தால், நான் இங்கு உட்கார்ந்து இருக்க மாட்டேன். இதில் மறைக்க ஒன்றும் இல்லை. ஜோவிகா  வெளியே வந்திருந்தால் ஆமாம் என்று அதை நான் சொல்லி இருப்பேன்" எனக் கூறியிருந்தார் வனிதா. ஜோவிகா எலிமினேட் செய்யப்படுவதை வனிதா  மறுக்கும் நிலையில்,  தற்போது ஒரு  ட்விஸ்ட்டை பிக்பாஸ் கொடுத்துள்ளது. 


அதன்படி, ஜோவிகா எலிமினேட் ஆனாலும் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றாமல், சீக்ரெட் ரூமில் அவரை தங்க வைப்பதாகத் தகவல் பரவி வருகிறது.  இருப்பினும் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.  முன்னதாக, கடந்த மூன்று சீசன்களாக சீக்ரெட் ரூமில் யாரும் தங்க வைக்கப்படாத நிலையில், தற்போது நடைபெறும் 7வது சீசனில் ஜோவிகாவை தங்கவைக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மூன்றாவது சீசனில் சேரன் சீக்ரெட் ரூமில் இருந்தது குறிப்பிடத்தக்கது.