Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்‌ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.


பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இந்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இதில், இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியில்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து நிரூப்பை தேர்வு செய்திருக்கின்றனர். இந்நிலையில், ‘Ticket to Finale’ டாஸ்க்கின் நான்காவது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி சற்று வித்தியாசமானதாக உள்ளது. போட்டியாளர்கள் மூன்று பேராக கலந்து கொள்ள வேண்டும். அப்போது கேட்கப்படும் கேள்விக்கு, போட்டியாளரின் பதிலும், ஹவுஸ்மேட்ஸின் கருத்துகளும் ஒருமித்து இருந்தால், போட்டியாளர் இறுதிக்கட்டத்துக்கு முன்னேறலாம். இது சற்று விவகாரமான டாஸ்க்காக இருப்பதால், பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வழக்கம்போல கோதாவில் குதிப்பதை எதிர்ப்பார்க்கலாம் என முதல் ப்ரொமோ பார்த்தபோது புரிந்தது.


சற்றுமுன் வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரொமோவில், அமீர், பாவனிக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது. ”அமீர் வந்து பாவனியை அபினய் விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்” என்ற கேள்வியை பாவனி முன்வைக்க, பதில் சொல்ல தெரியாமல் அமீர் திணறி நிற்கிறார். அதனை அடுத்து ப்ரியங்கா பேசும்போது, “வைல்ட் கார்ட் எண்ட்ரி தந்து பாவனியின் பெயரை பயன்படுத்துகிறார்” என தனது கருத்தை முன்வைக்க, அமீர் பச்சை விளக்கு காட்டுகிறார். இது எந்த கேள்விக்கு என்பது தெரியவில்லை. ப்ரொமோவில் வெட்டி ஒட்டி இருப்பது உண்மையா என தெரிய இன்றைய எபிசோடை பார்க்க வேண்டும்.





ப்ரொமோ:2









பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்