Bigg Boss 5 Tamil Day 75: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக்கை அடுத்து டிசம்பர் 12-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இமான் எலிமினேட்டாகி வெளியேறினார்.


இந்த வாரம் கேப்டனாக யாரும் தேர்ந்தெடுக்கப்படாததால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேட்டாகி இருக்கின்றனர். அதனை அடுத்து 74வது நாள் நடைபெற்ற எபிசோடில், கொடுக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தாமரைச் செல்வி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார். இதனால், தாமரை, சிபி, நிரூப் ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர். இந்நிலையில், 75வது நாளுக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அதில், நாமினேஷனில் இருந்து தப்பித்து கொள்வதற்கான கடைசி வாய்ப்பாக பிக் பாஸ் ஒரு டாஸ்க்கை அறிவிக்கிறார். 


அந்த டாஸ்க்கின் முடிவில் சஞ்சீவ் நாமினேஷனில் இருந்து தப்பித்திருப்பதாக தெரிகிறது. அதனை அடுத்து, நாமினேஷனில் இருப்பவர்களின் விவரத்தை வெளியிடுகிறார் பிக் பாஸ். அபினய், ப்ரியங்கா, பாவனி, வருண், அக்‌ஷரா, ராஜூ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.


அதுமட்டுமின்றி, பாவனியிடம் அமீர் தனது க்ரஷ் காதலை சொல்லிவிட்டதாக ப்ரியங்காவிடம் தெரிவிக்கிறார். அதற்கு பாவனி வெட்கப்பட, அமீர் குலுங்கிசிரிக்க, ப்ரியங்கா சிரிக்க, பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல் கதை ரெடியாகிவிட்டதாக பேச்சு வருகின்றது


ப்ரொமோ:3












ப்ரொமோ:2












ப்ரொமோ:1







































































































































































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்